பாவையே பார்த்திடுவாய்


நீல வானம் தோற்றது
உன் நீல விழிகளில்

நிலவும் தோற்றது
உன் விழி ஒளியில்

மலரும் தோற்றதடி
மங்கையே உன்
மந்தகாசப் புன்னகையில்

நான் தோற்றுவிடக் கூடாது
உன் காதலில்

ஆதலினால்
காதலினால்
ஒரு முறை
பாவையே
பார்த்திடுவாய்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Oct-11, 10:39 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 213

மேலே