அப்பாவை அறிவோம்

அப்பாவை அறிவோம்

அப்பா என்றொரு அதிசய அரிய பொக்கிஷம்
ஆலமரம் போல் நம்மை காக்கும் அரண் வளையம்
இன்பத்தை அள்ளி வழங்கும் நடமாடும் உயிரோவியம்
ஈசனின் படைப்பில் வந்த உயர்த்ததொரு காவல் தெய்வம்
உரிமையோடு நம்மை கண்டித்து நல்வழிகாட்டும் உயிரினம்
ஊசி குத்தினால் வலியைக்கண்டு துடிக்கும் மெல்லிய இதயம்
எல்லாம் நமக்கு அளிக்க எதையும் செய்யும் உன்னத மனிதன்
ஏனென்று கேட்காமல் அன்பை பொழியும் இனிய உள்ளம்
ஐயங்களை தெளிவு செய்ய அர்த்த ராத்திரியிலும் விழிக்கும்
ஒன்றாக இருந்து ஊரெல்லாம் சென்று பெருமைப் படும் மனம்
ஓயாமல் உழைத்து நம்மை உயரவைக்கும் நல்லதொரு நண்பன்
அப்பா என அழைக்க ஆயிரம் தாமரைகள் முகத்தில் மலரும்
தனிப்பிறவி அவரை அறிவோம் பாராட்டுவோம்

எழுதியவர் : கே என் ராம் (9-Dec-23, 6:53 am)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : appavai arivom
பார்வை : 29

மேலே