ஏனோ சொல்வாயா நீ எனக்காவல் தெரிந்துகொள்ள
தேனில் திளைத்துமென் தென்றல் தனில்மிதந்து
தேனிதழை முத்தமிட் டும்திருத்தி இல்லாமல்
மானின் விழியில் மயங்குது தேன்வண்டு
ஏனோசொல் வாய்நீ எனக்கு
----இன்னிசை வெண்பா எதுகை மோனை எழிலுடன்
தேனினிலே திளைத்தினிய தென்றல்தன் னிலேமிதந்து
தேனிதழை முத்தமிட்டும் பின்திருத்தி இல்லாமல்
மானின்பூ விழிதன்னில் மயங்குதுபார் தேன்வண்டு
ஏனோசொல் வாயாநீ எனக்காவல் தெரிந்துகொள்ள
-----முற்றிலும் காய் அமைந்த கலிவிருத்தம் எதுகை மோனை எழிலுடன்
தேனினிலே திளைத்தினிய தென்றல்தன் னிலேமிதந்து
தேனிதழை முத்தமிட்டும் பின்திருத்தி இல்லாமல்
மானின்பூ விழிதன்னில் மயங்குதுபார் இனியவண்டு
ஏனோசொல் வாயாநீ எனக்காவல் தெரிந்துகொள்ள
----காய்முன் நிரை கலித்தளை ஏற்கனவே அமைந்திருப்பதால்
தேன்வண்டு இனியவண்டானதால் வேண்டிய ஏழு கலித்தளை
பெற்று இப்போது தரவு கொச்சகக் கலிப்பா எதுகை மோனை எழிலுடன்