துன்பத்திலும் இன்பம்
கோயம்புத்தூர் சென்று நானும்
கொஞ்ச காலம் படிக்கையிலே
கொங்கு நாட்டு மக்கள் அன்பு
கோடை கால மழையினை போல்
சொந்த ஊரைப் பிரிந்து நானும்
சோக கீதம் பாடுகையில்
சொந்தம் என்று நாங்கள் உண்டு
சொல்லி சொல்லி வளர்த்தார்கள்
அம்மாவுடைய தாய்ப்பாசம்
அங்கு நானும் பார்க்கையிலே
அப்பாவுடைய நிறுவனமோ
அழைக்க காத்து நின்ற வேளை
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து
விரைந்து நானும் திரும்புகையில்
விதி ஏனோ என்னை மீண்டும்
வீட்டுப் பாடம் செய்யச் சொல்ல
நீதி தேவன் கட்டுப்பாட்டில்
நீண்ட காலம் சேவை செய்ய
நிலவும் என்னை பின்தொடர்ந்து
நித்தம் தூது கொடுத்திடவே
அதில் இருக்கும் எழுத்து யாவும்
ஆண்டவனின் கட்டளையே
என்று நானும் உணர்ந்த வேளை
ஏசி பஸ்ஸில் விரைந்து விட்டேன்
அன்பு மக்கள் பிரிந்த துன்பம்
ஐந்து நாட்கள் இருந்த போதும்
அன்னை தந்தை மகிழ்ச்சியிலே
ஆனந்தத்தை கண்டுவிட்டேன்