புன்னகையாள் இன்னல் புரிகிறாள் ஏன்

பொழுதேநீ போய்விடு பூமலர வேண்டாம்
எழுதுவாய் நீமலர் ஏட்டில் கவிதையை
தென்றலே வீச தவிர்த்துவிடு வீசவேண்டாம்
இன்னும் இவள்வந்த பாடில்லை புன்னகையாள்
இன்னல் புரிகிறாள் ஏன்

--- பல விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (17-Dec-23, 8:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 104

மேலே