தமிழகத்தின் ஐந்திணை நிலங்களின் மாண்பு
""" தமிழகத்தின் ஐந்திணை நிலங்களின் மாண்பு """
அகலில் நீளில் அளவில் வரையில் அடங்கல் இல்மெய் அறிவில் முன்னோர்
அவருள் பிறப்பில் அமையப் பிறந்தார் அவர்வாழ் நிலத்தில் அருள்பெற் றியற்கை
அழகும் பொலிவும் அளவில் வளமும் அலுங்கில் முறைமை அனைத்தும் கண்டார்.
அசைவில் மலையும் அதனைச் சார்ந்த ஆருயிர் வனமும் ஆங்குயிர்த் திரளும்
மிசையில் நிலைத்து மீதுறும் காடும் மிகையாம் மரமும் மேவிடும் விலங்கும்
நசைவறு வயலும் நாடாள் விளைவும் நண்ணிடு பயிரும் நாட்டிடு முயிரும்
இசைவுறு கடலும் இணைந்திடு நிலமும் எண்ணறு அளவில் எழுகடல் விலங்கும்
திசைகளில் பரந்தமண் திரிந்திரும் வறளும் தீய்த்திடும் கதிரும் திகழ்ந்திடு மாக்களும்
விசையுறு நிலத்தில் விரிந்தமை கண்டார் விதித்தவர் தொகுத்தனர் விசும்பருள் ஐந்திணை!!
அசைவில் மலையே ஐந்திணைக் குறிஞ்சி அதிற்படு முருகன் அதனருந் தலைவன்.
மிசையில் வனமைந் திணையதில் முல்லை மெய்ப்படு நெடுமால் மேலமை தலைவன்/
நசைவரு வயல்வெளித் திணைகளில் மருதம் நாட்டார் வாழ்த்திடு வருணனத் தலைவன்.
இசைவுறு கடல்நிலம் இருந்திணை நெய்தலம் ஈங்குறும் இந்திரன் இந்நிலத் தலைவன்.
திசைகளில் பரந்தமண் திரிந்ததப் பாலையாம் தெய்வமாய் ஈண்டுயர் கொற்கையே தலைவி!
குறவரும் மலைஞரும் குறிஞ்சியின் மாந்தராம் குரங்கினம் மலைப்புள் குறிஞ்சிக்கு வினங்கினம்.
பெறவுரும் தெள்தினை பெருகிடும் தேனதும் பெய்திடும் மலைக்கனி பெற்றிரும் குறிஞ்சியில்!
நறவருந் தேக்கதும் நற்கருங் காலியும் உரைமணச் சந்தனம் உறுநெடுங் கோங்கதும்
தறவரும் தீஞ்சுனை தவழ்சிறு ஓடைகள் தலைவிழும் வான்மழை தரவிழும் அருவிகள்
செறவளர் மலைவனம் சேர்ந்ததில் உயிரினம் செறிந்திடும் தலைத்தினை சேவலன் குறிஞ்சியே!
வேட்டுவர் மறவரும் வெவ்வன மாந்தரும் நாட்டினர் முல்லையில் நாற்பதெண் விலங்கினம்
கோட்டுயர் புலியினம் குவலயம் மானினம் வானுயர்த் தருக்களில் வாழுபற் புள்ளினம்,
காட்டினில் வாழ்ந்திரு கணக்கறுஞ் செடிகளும் காணரும் உயிர்களும் களித்திரும் முல்லையில்!
கோட்டினில் விழுமழை கோட்டினின் றிறங்கியே கூட்டிடும் ஆற்றுடன் குதியிடும் நதிகளாய்
நாட்டினில் யாவரும் நலம்பெறக் கான்பொருள் நாடொறும் ஈந்திடும் நசைவிலா முல்லையாம்!
உழவரும் அரசரும் ஒல்புகழ்க் கலைஞரும் ஊர்திரள் மாந்தரும் கலைஞரும் வணிகரும்
விழிஞரும் கோவலன் வீரரும் படைஞரும் விரியிசைப் பாணரும் வியல்வது மருதமே!
விழமழை செறுந்நதி விரிகுளம் ஏரிகள் விளைநிலம் முழுவதும் விளைந்தடும் பெரும்பொருள்!
கழனியின் ஆவினம் காரெரு மையினம் தொழனெனும் நாய்களும் தோகைபூங் குயில்களும்
அழகுபற் புள்லினம் ஆங்குயர் பயிர்வகை அரியபூஞ் செடிகளும் அருங்கனி மரங்களும்
உழவுறும் வயல்களில் ஊறுநெற் பயிர்களும் ஓங்கிநீள் கரும்பதும் ஒளிர்ந்திடும் வாழையும்
துழவிடும் மஞ்சளும் தோகைபோல் தெங்கதும் தொன்மணத் தாழையும் தூவுபொற் பவழமும்
விழவரும் பலவதும் விழுஞ்செழு மாங்கனி விரிந்தொளிர் மாதுளம் வெடிகனிப் பூசனி
அழகிதன் கருவிழி அதைநிகர் நாவலும் ஆம்பலும் குவழையும் அல்லியும் தாமமும்
தொழவரும் மல்லியும் தொடைமலர் முல்லையும் தூங்கலர் கொன்றைபூத் தூவிடும் வேம்பதும்
பழகிடும் வயல்வளம் பாரினில் மாந்தரின் பசிப்பிணி ஆற்றிடும் பாரிதான் மருதமே!
அழகரும் ஐந்திணை அரசனாம் மருதமண் அதனிடை வளந்தரும் ஆயிரம் பயிர்களும
சுழல்முகில் மண்ணிடை சோர்வரப் பொழிந்திட வரையிலா விரிநிலம் வருணனின் மருதமாம்!
தழலதன் ஒளியுமிழ் தரணியில் கதிரவன் கொடைதரும் வளமிகும் கோமகள் மருதமாம்!!
வலைஞரும் பரதவர் கழிஞரும் படவரும் வாழ்விடம் கடலதன் கரைசெறி நெய்தலாம்!
அலைநதி ஆறுகள் அளித்திடும் நீருடன் ஆறெனப் பொழிமழை கடலடி ஆறுகள்
அலைகடல் ஆக்கிடும் உவரநீர்க் கழிகளும் உள்நதிக் கழிமுகம் உறவரும் நெய்தலாம்!
நிலைபெறும் மணல்வெளி நீரகொள் திறனில நெய்தலின் விளைநிலம் நெடுங்கடல் நீரதாம்!
வலைகளும் படகதும் வலியகப் பல்களும் வலைபடு கயல்களை வஞ்சியைச் சுறக்களை
தொலைவுறு கடலதில் துணிவுடன் வலைப்பட தொல்கடல் ஆங்கவர் தொட்டதைக குவிக்குமே!
அலைதொடு கரைதனில் அற்றமும், தாழையும் அவையிடை ஈஞ்சமும் அருந்தருப் பனைகளும்
குலைதரும் மடல்தரும் கோடையில் நரவமும் கொய்பழக் குவியலும் கொடுப்பது நெய்தலாம்!
அலையறு கழிகளில் ஆறெழில் முத்தமும் மலைபடு நதிமுகம் அளித்திடும் பன்மணி
விலைமிகு சங்கமும் விளைவது நெய்தலில் விலைபடும் சந்தையில் வேற்றுமண் மாந்தரின்!
அலைமிகும் ஆழியில் ஆர்த்திடு புயல்மழை ஆழ்கடற் கரைகளில் அழித்திடும் கரைத்திடும்!
நலைவிடும் ஆர்கடல் நாடொறும் ஆடவர் நண்ணிடக் கரைகளில் நனைவிழிப் பெண்களே!
வலைவிடும் பரதவர் வலிகலம் கடல்புகின் வந்தவர் சென்றதில் வல்விதிக் கடல்கொளும்!
விசும்பதன் மழையெலாம் வீழ்வறும் வெம்மையில் விரிந்தபின் நிலமது வெறுமணற் பாலையாம்!
பொசுங்கிடும் வேனலில் பொறைமிகு நாட்டவர் போக்குடை மாடவர் புலம்படும் மாந்தரே!
பசும்புலும் வளர்வதில் பசுமரம் தழைப்பதில் நசும்படும் விலங்குகள் நரியுமொட் டகமுமே!
பசுங்குலை ஈஞ்சமும் பாலைவெம் பனைகளும் விசும்பிடும் நொய்மழை விரிசிறு சோலைகள்.
திசும்பதன் கடலெனத் திகழ்கொடும் பாலையின் மிசைவளர் பணியெதும் இசைவது இல்லையால்!
விசும்ப்தும் முகிலது விலகிடும் பாலையாய் விரிந்திடும் எரிந்திடும் வெங்கதிர் வேந்தனும்!
பசுஞ்செடி ஏதுமில் பாலையில் இரவினில் பாழ்நிலம் உறைநிலைப் பனிப்புகைக் குளிருறும்!
காசுறும் நாற்றிணை கவினுறு சீர்கெடின் மூசுவெம் பாலையாய் மூத்தவள் வாழ்ந்திடும்!!
குறிஞ்சியும் முல்லையும் மருதமும் நெய்தலும் பாலையும் ஐந்திணை பாங்குடன் நிலமகள்
விரிந்திடப் புவித்தலம் விரித்ததை நம்முனோர் வியனறி திறனது விளைந்திடு மறிவதில்
தெளிந்தனர் தேர்ந்தனர் தெள்ளிதின் வகுத்தனர் தொன்மலை கானகம் தொகுவயல் கடல்நிலம்
இருந்திடப் பூமியில் இழைந்துபல் லாண்டுகள் இசைந்திட வுயிர்களை இசைத்ததை நிலைத்தனர்!
அருந்தவம் இயற்கையை அரவணைத் தேயவர் அதனதன் இயற்பிடம் அமைநிலை மதித்தனர்!
குறிஞ்சியில் முருகனை முல்லையில் மாலனை மருதமண் வருணனை நெய்தலிந் திரந்தனை
இறைந்தனர் இவைகளை ஏற்றனர் போற்றினர் என்றெனும் மாற்றிலர் இருந்தனர் பல்யுகம்!!
- - - - சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா,
16 டிசம்பர் 2023 - சனிக்கிழமை.