மாண்டளும் மறவேனடி

மாண்டளும் மறவேனடி
×××××××××××××××××××××
வாழை மரத் தோட்டத்திலே
வாழைப்பூவை பறிக்க வந்தேன்
வடிவழகி மச்சினியின் செவ்விதழ்
உதட்டழகைக் கண்டு
வாழைப் பூவை தான் மறந்து
வாழை மரத்தை பிடிங்குப் போட்டேன்டி

மாமரத்து தோப்பிலே
மாங்காய் பறிக்க வந்தேன்
மாமன் மகள் கன்னங் குழியழகைக் கண்டு
மாங்காயத் தான் மறந்து
மாமரத்தை சாய்த்து போட்டேன்டி

மூங்கில் கட்டுக்குள்ளே
மூங்கில் குச்சி தேடிப்போனேன்
மாமிய மகள் முழங்கால் அழகைக்கண்டு
மூங்கில் குச்சி தான் மறந்து
மூங்கில் மரத்தையே வெட்டிப் போட்டேன்டி

அத்தை மகள் மகள் ரஞ்சிதமே
அழகான கரம் பிடிக்க ஒடி வந்தேன்டி
ஓடி வந்த வேளையிலே
பங்காளி கரம் பிடித்து மணமகளாப்
பட்டுச் சேலையில் மினு மினுத்த
பட்டுச் சேலையில் மினு மினுக்கப்
பார்த்த மச்சான்
தன்னையே தான் மறந்தேன்..
தன்னையே... தான் மறந்து..
தன்னையே அழித்துக் கொண்டேன்..
தன்னைத் தானே அழித்துக் கொண்டேன்


மீண்டு வருவேனடி மீண்டும் வருவேனடி
மச்சான் உன் வயத்துல கருவாக வருவேன்டி
மீண்டும் பிறப்பேனடி  உன் மகனாக
அம்மாயென்ற அழைப்பனேடி
ஆசை முத்தமும் தருவாயேடி..

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (17-Dec-23, 12:12 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 57

மேலே