மின்னலோவியம் நின் விழித்திரை தன்னிலே

மின்னலின் கீற்று முகில்திரை ஓவியம்
மின்னலோவி யம்நின் விழித்திரை தன்னிலே
பின்னல் கருங்கூந்தல் தன்னிலே மல்லிகை
கன்னத்தில் செம்மாங் கனி

----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
மின்னலின் கீற்று முகில்திரை ஓவியம்
மின்னலோவி யம்நின் விழித்திரையில் --என்னன்பே
பின்னல் கருங்கூந்தல் தன்னிலே மல்லிகை
கன்னத்தில் செம்மாங் கனி

----ஒரு விகற்ப நேரிசை வெண்பா

மின்னலின்வெண் கீற்று முகில்திரையில் ஓவியமோ
மின்னலோவி யம்நின் விழித்திரையில் என்னன்பே
பின்னலெழில் கூந்தல் தன்னிலேவெண் மல்லிகைப்பூ
கன்னமதில் செம்மாங் கனியிரண்டு துள்ளிடுதே

---கூவிளங்காய் தேமா காய் காய் கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Dec-23, 8:11 am)
பார்வை : 64

மேலே