வென்றிடுவோம்

வென்றிடுவோம்.
26 / 12 / 2023

பிறப்பும் இறப்பும் நம்கையில் இல்லை
வெற்றியும் தோல்வியும் நம்கையில் இல்லை
கற்றதும் விற்றதும் நம்கையில் இல்லை
வீழ்வதும் எழுவதும் நம்கையில் இல்லை
வாழ்வதும் தாழ்வதும் நம்கையில் இல்லை
நடப்பதும் கிடப்பதும் நம்கையில் இல்லை
நாளும் கிழமையும் நம்கையில் இல்லை.
நம்கையில் இருப்பதெல்லாம்
இன்றைய பொழுது...
இந்த ஒரு நொடி.
நேரத்தின் அருமை உணர்ந்திடுவோம்.
போராடி வாழ்வை வாழ்ந்திடுவோம்.
காலத்தை கணக்காய் செலவிடுவோம்
ஞாலத்தை இனிதாய் வென்றிடுவோம்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (26-Dec-23, 7:38 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 76

மேலே