தூக்கம் கலைக்கும் நிகழ்வுகள்
சாலையோரம்
வேலேந்தி
முறைக்கும் - அந்த
முகத்தின் தணலா?
மலை முகட்டில்
எட்டிப் பார்க்கும்,
பனியை விளக்கிய
அந்த வெளிச்சமா ?
முன் இருக்கையில்
எழுந்து நின்று
திரும்பி நீட்டும்
சிறு பிஞ்சுக் கைகளா ?
பூட்டிய
காதுகளுக்குள்
பொங்கிக் கொண்டிருக்கும்
பாடலின்
அந்த சில வரிகளா ?
கடைசிப் பொட்டலமும்
விற்று விட்டதாய்
கூச்சலிடும்
அந்த சிறுவனின்
விடுதலையா ?
அதிகாலைப் பேருந்தில்
என் தூக்கம்
கலைத்தது
எதுவெனத் தெரியவில்லை !!
கனவுகள் சுமந்து
செல்கையில்
தூங்க விடுவதில்லை
இப்படி சில நிகழ்வுகள் !!

