மானையொத்த அழகுவிழி மதுமலர்போல் சுவையிதழ்கள்

மானையொத்த நீலவிழி மென்பூப்போல் செவ்விதழ்கள்
தேனினைத் தாங்கியோடும் செவ்விதழ் ஓடையில்
மோனைத் தமிழ்போன்ற முத்திளம் புன்னகை
வானின் நிலவு முகம்

----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா மூன்றாம் சீர் மோனையழகு

மானையொத்த நீலவிழி மென்பூப்போல் செவ்விதழ்கள்
தேனமுதைத் தாங்கியோடும் செவ்விதழ்நல் ஓடையிலே
மோனைத்நற் தமிழ்போன்ற முத்திளம்வெண் புன்னகைநீ
வானத்து நிலவுபோன்ற முகம்மேகம் போல்கூந்தல்

-----முற்றிலும் காய் கலிவிருத்தம மூன்றாம் சீர் மோனையழகு
---னை ன னை ன ----எதுகை
மோனைகள்
----மா மெ , தே செ , மோ மு ,இன எழுத்து வ மு வர்க்க எழுத்து

மானையொத்த அழகுவிழி மதுமலர்போல் சுவையிதழ்கள்
தேனமுதைத் தாங்கியோடும் செவ்விதழ்நல் ஓடையிலே
மோனைத்நற் தமிழ்போன்ற முத்திளம்வெண் னகையினள்
வானத்து நிலவுபோன்ற முகம்மேகத் திரள்கூந்தல்

---கலித்தளை மிகுத்து மாற்றியதில் உருவான
தரவு கொச்சகக் கலிப்பா முன்னது போல் எதுகை மோனைகள்
ஓசை :-- கலித்தளை யுடன் வெண்டளை விரவி வந்ததால்
எது அகவல் துள்ளல் ஓசை தரவுக் கொச்சகக் கலிப்பா என்பர்
பிற தளைகள் பிரிந்திசைத் துள்ளல் என்பர்
துள்ளல் கலிப்பாவிற்கு பொதுவான ஓசை
காய் முன் நேர் --வெண்டளை காய் முன் நிரை --கலித்தளை

எழுதியவர் : கவின் சாரலன் (3-Jan-24, 3:54 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 116

மேலே