அவள் அழகும் வீரமும் --- பஃறொடை வெண்பா
உன்புன்னகை யில்நான் நதியின் நடைகண்டேன்
பெண்ணே இதழ்கள் அலர்ந்து சிரித்தாய்நீ
கண்ணே அதில்நான் கபடிலா உன்மனம்
கண்டேன் இதோக்கண்டேன் நானுனது கோபத்தை
கண்மறைக்கும் மின்சார வான்மின்னல் போலவே
துட்டரைக் கண்டு மருளாத உன்வீரத்தை
கண்டேன்நான் அவ்வீணரை நீசாடி
வீழ்த்தி எழுகையில் அங்கு