இவள் அழகு---பஃறொடை வெண்பா
பாவையே பூவைநீ மென்மையில் என்றுமே
மாலையில் மல்லிமணம் வீசுதே உன்மேனியில்
வானிலே வந்துலாவும் வெண்ணிலாவும் உன்முகம்
கண்டபின்னே மேகம்பின் னேவெட்கி போய்அங்கு
காணாமல் போவதேனோ சொல்வாயோ பாவாய்
இதுவுன் அழகினாலல் லவா