உழுதுண்போ ரென்னாளு மோய்வ தில்லை - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(காய் காய் மா தேமா)
உழவுக்குந் தொழிலுக்கும் ஓங்கும் சீர்மை
உழுதுண்போ ரென்னாளு மோய்வ தில்லை!
தழைச்சத்துப் பெய்தங்கே தாமே காப்பார்
முழுப்பங்கும் உழவருக்கே முந்திச் சொன்னேன்!
- வ.க.கன்னியப்பன்