குலோத்துங்க சோழன் கோவை - நூல் - இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.

அஃதாவது-தெய்வத்தானாவது தலைவியானாவது கூடுதல்; அவற்றுளிது தலைவியாற் கூடுதலென்க.

அது: வேட்கையுணர்த்தல், மறுத்தல், உடன்படல், கூட்டமென நான்கு வகைப்படும்;

அந்நான்கும்- இரந்த பின்னிற்றற் கெண்ணல் முதலிய பதினைந்தும் பிறவுமாகிய விரிகளையுடையன; அவை வருமாறு

முன்னிலை யாக்கல்.

மெய்தொட்டுப் பயிறல்.

பொய் பாராட்டல் (9, 10)

இடம்பெற்றுத் தழால்.

வழிபாடு மறுத்தல்.

இடையூறு கிளத்தல்.

நீடுநினைந் திரங்கல்.

மறுத்தெதிர் கோடல்.

(இ-ள்) முன் வழிபாடு மறுத்ததனை மறுத்துத்தலைவி தலைவன் கூறியசொல்லை யேற்றுக் கோடலைக் கூறுதல். போரேற்றா னென்பதற்குப் போரெதிர்ந்தானென் புழிப்போல எதிர்தல் – ஏற்றல்.

கட்டளைக் கலித்துறை

வெப்பார் வெகுளிக் களிற்றாளர் காமத்தின் வெள்ளத்தையா
முப்பார் புணையிற் கடப்பதொப் பாயுவ ராழிசுற்றுங்
குப்பாவை கேள்வன் குமார குலோத்துங்கன் கோழிவெற்பிற்
றப்பா நிறைபொறுக் கச்செய்தி லேமெய்த் தவநெஞ்சமே! 15

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (5-Jan-24, 9:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே