தாய்மை
தாய்மை !!
———
தாய்மை என்பதே
தியாகத்தின் எல்லை !
தாயின் அன்பினும்
உயர்ந்தது இல்லை !
உதிரம் கொடுத்தவள்
உயிரைக் காத்தவள் /
விதியினை மதியால்
வென்றிடச் செய்பவள் /
தனக்கென வாழாது
நமக்கென வாழும் /
தாயினும் சிறந்த
தெய்வமும் உளதோ !!
-யாதுமறியான்.