சுமைகள் சுகமானதே

சுமைகள் சுகமானதே
~~~~~~~~~~~~~~~

மங்கையர்க்கு கிடைத்த மகத்தான வரம் /
மனைவியாக வந்தவருக்கு தாய்மைதான் பெருமை /

விஞ்ஞானத்தை மிஞ்சும் கருப்பையின் படைப்பு/
விருந்தாக வரும் விந்தினை வித்ததாக/

வளர்த்து உருவெடுக்கும் உன்னதமான மாற்றம் /
வாரிசுகளை உருவாக்கும் தாய்மையின் படைப்பு /

படைக்கும் கடுவுள் பிரம்மன் போன்றவள் /
பத்து திங்கள் வயிற்றில் சுமந்து/

பல மாதங்கள் மடியிலும் தோளிலும் /
பாசத்துடன் சுமந்து தாலட்டியவள் தாய் /

பிறப்பில் வலிதரும் மனிதர்களே பெற்றோர்/
இறக்கும் வரை வலிதராமல் இரக்கமின்றி /

தெருவில் பசியோடு தவிக்க விடாதீர்/

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (27-Dec-23, 6:28 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 733

மேலே