துயிலாநான் உன்னை நினைத்தே நிலவைப் பார்த்திருப்பேன் காலைவரை

துயிலும் இரவில் கனவிலச மாக
வயலின் இசையாய் விரியும் பொழுதில்
கயல்விழி மூடியே கண்ணுறங்கு வாய்நீ
துயிலாநான் உன்னைநினைத் தே

-----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

துயில்கின்ற இரவினிலே கனவிலச மாகவரும்
வயலினின்இன் இசைபோன்று விரிகின்ற பொழுதினிலே
கயல்விழிநீ மூடிமெல்லக் கண்ணுறங்கு வாய்மகிழ்ந்து
துயிலாநான் உன்னைநினைத் தேநிலவைப் பார்த்திருப்பேன்

----முச்சீர் காய் ஆக்கியதில் காய் முன் நிரை கலித்தளை
மிகுந்து தரவு கொச்சகக் கலிப்பா ஆனது

துயில்கின்ற இரவினிலே கனவிலச மாகவரும் இனிமையிலே
வயலினின்இன் இசைபோன்று விரிகின்ற பொழுதினிலே என்னன்பே
கயல்விழிநீ மூடிமெல்லக் கண்ணுறங்கு வாய்மகிழ்ந்து நிலவிரவில்
துயிலாநான் உன்னைநினைத் தேநிலவைப் பார்த்திருப்பேன் காலைவரை

----முற்றிலும் காய் ஐஞ்சீர் கலித்துறை

எழுதியவர் : (9-Jan-24, 10:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 88

சிறந்த கவிதைகள்

மேலே