மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி

மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும்

- கவிஞர் இரா. இரவி

*****

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திட்ட மாமனிதர்
வீரத்தின் சின்னமாக சிறந்திட்ட நல்லவர்

மதுரையின் பெருமைகளில் ஒன்றாகத் திகழ்ந்தவர்
மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்திட்ட வல்லவர்

வாரிவாரி வழங்கி வள்ளல்களை வென்றவர்
வள்ளலார் வழியில் பசியாற்றி மகிழ்ந்தவர்

திரைப்படக்கல்லூரி மாணவர்களை வாழ்வித்தவர்
திரைப்படத்தில் நடித்து நிஜத்தில் நடிக்காதவர்

இன்னலில் இருப்பவர்களுக்கு உதவி மகிழ்ந்தவர்
இவர் போல யாரு என்று ஏங்க வைத்தவர்

புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் அளித்தவர்
புரட்சிக்கலைஞர் பட்டத்திற்கு பொருத்தமானவர்

வழக்குகள் பல சந்தித்தபோதும் சளைக்காதவர்
வரலாற்று சாதனை சிற்ப்பிலும் நிகழ்த்தியவர்

இறந்த பின்னும் இவ்வளவு கூட்டம் கூட்டம்
எண்ணிலடங்கா மக்கள் மரியாதை செலுத்தினர்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அலங்கரித்தவர்
எதிரியாக யாரையும் என்றும் நினைக்காதவர்

அன்பு செலுத்துவதில் இமயமாய் நின்றவர்
அனைவரையும் நேசித்த அன்பின் குன்றானவர்

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி எழுப்பியவர்
நல்லவர் விஜயகாந்த் வாழ்வார் என்றும்

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (9-Jan-24, 3:58 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 58

மேலே