ராஜலிங்கம் 230124

வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு
செயல்கள் ஒவ்வொன்றையும்
விரைவாய் ஆற்றும் தெம்பு
நண்பர்களிடத்தில் நல்ல அன்பு..

அது ராஜ லிங்கம்... அவன்
குணத்தில் முத்து லிங்கம்
அறிவில் மகாலிங்கம்
ஆற்றலில் வீர லிங்கம்...

நேற்று இந்நேரம் அவனுடன்
சென்னையில் வீதி உலா..
இன்று அவனுக்கு பிறந்தநாள் விழா..

தங்கியிருந்த விடுதியில்
தத்துவங்கள் பல சொன்னான்..

வயோதிகத்தில் உடல் நிலையில்
நம்மை அறியாமல் நிகழும்
முதல் சறுக்கல்.. அது உடல்நிலை
அறிந்து நீண்ட காலம்
வாழ வைக்கும் படிக்கல்..

பணமாய்.. பொன் நகைகளாய்
சேர்ப்பதைக் காட்டிலும் நிலங்களாய்ச் சேர்ப்பது
பூமிக்கும் நமக்கும் ஒரு பந்தத்தை ஏற்படுத்தும்..
சேர்ப்பவர்க்கு மட்டுமின்றி
சமூகத்திற்கும் அது பலன் தரும்..

இன்னும் பல சொன்ன அவன்
ஒரு நடமாடும் நூலகம்.. வாய்
பேசும் பல்கலைக்கழகம்...

அவனது சிந்தனை பேச்சு
செயல்களில் தெரியும்
அவன் பெற்ற கல்வி செல்வம் வீரம்
அவனுக்கு என்றும் இருக்கட்டும்
மிக நல்ல நேரம்...
ராஜலிங்கம் வசந்த வாழ்த்துகள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

🌹🌷👍🪷👏😍

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (24-Jan-24, 7:41 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 83

மேலே