மனோன்மணி 02022024

மனோன்மணி...
இனியவனே மனதால்
என்றும் இளையவனே...

அன்பு உள்ளம்.. அரவணைக்கும்
அன்னை உள்ளம்... அது
கள்ளம் கபடம் இல்லா
மனோ... உந்தன் உள்ளம்...

நீ பேசும் மொழிகளில்
மா பலா வாழை முக்கனியும்
தோற்று விடும்...

நெடுஞ் சாலை ஓரங்களில்
இருக்கும் மைல் கல்...
நியாயம் நேர்மையில்
நெடுஞ்சாலைத் துறைக்கே
நீ மைல் கல்...

தன் உள்ளங்கையில் ஊற்றிய தேன்
அது தன்னுடையதாக இல்லாதபோது
தன் நாவிற்கு அதை செல்ல விடா
கட்டுப்பாடு உன்னுடையது.. அது
உன்னிடம் எனக்கு மிகவும் பிடித்தது..

கல்லூரி ஆசிரியர் பணி
ஹைவேஸ் பொறியாளர் பணி
கடினமாக உழைப்பது
உனக்கு ரொம்ப சாதாரணம்...
எப்படி பணியாற்ற வேண்டும்
என்பதில் நீ பிறருக்கு உதாரணம்..

என் தாய்க்கு அடுத்து எனக்கு அதிகம்
உணவிட்டது உன் தாய்...
அந்த அன்பில் நெகிழ்ந்து போகிறேன்
மனம் மகிழ்ந்து போகிறேன்..

ஸ்டடி ஹாலிடேகளில் உன் அன்னை
எனக்கு அவ்வப்போது வழங்கிய தேநீரில்
ஸ்டெடியாக எனது செமஸ்டர்
மதிப்பெண்கள் கூடியது.. அதை
என் மதிப்பெண் தாள்கள் கூறியது..

உன் தந்தை முக்கியத்துவம்
கொடுத்து என் பெயர் சொல்லி
அழைத்த பொழுதுகளால்
நான் எனக்கு முக்கியமானவன்
ஆகிப் போனேன்..

வானம் உனக்கு வசப்படும்...
வசந்தம் உனக்கு வாழ்த்து கூறும்..

மனோன்மணி ராஜன்.. உன்
இனிய பிறந்தநாளில்
அன்புடன் வாழ்த்தும் நண்பன்
ஆர். சுந்தரராஜன்...

👍😀👏🌷🙏🪷🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (2-Feb-24, 10:21 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 139

மேலே