கிரேஸ் அக்கா 07022024

கிரேஸ் அக்கா...
டிகிரி ஒன்றை முடித்து விட்டு
எங்களுடன் நீ டிகிரி படித்ததால்
உன்னுடன் நாங்கள் படித்த
நான்கு ஆண்டுகள்
ஒரு உயரிய வகுப்பில்
படித்ததாய் எமக்குள் ஓர் உணர்வு..

நீ உருவத்தில் உயரம்
அது பார்த்தவுடன் தெரிந்தது
உள்ளத்தில் உயரம்
அது உன் குணத்தில் தெரிந்தது
படிப்பிலும் உயரம்.. அது
பின்னர்தான் தெரிந்தது...

படித்து படித்து வளர்ந்த
உனக்கு ஊரில் நல்ல பேர்...
நீ வகித்த நகராட்சி பொறியாளர்
பதவியால் வளர்ந்தது பல ஊர்..

பதவியில் பெற்றாய் பணி நிறைவு
பேரப் பிள்ளைகளால்
பொழுதுகள் ஒவ்வொன்றிலும்
பெறுவாய் என்றும் மன நிறைவு..

அதிகம் படித்துள்ளோம் என
கர்வம் தலைக்கு ஏறாமல்
கனிவைத் தனதாக்கி வாழும்
கிரேஸ் அக்கா... நீ
வெரி வெரி கிரேட் அக்கா...

அக்காவிற்கு அன்புத் தம்பியின்
வசந்த வாழ்த்துகள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.
👍🙏😀🌷💐💐

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (18-Feb-24, 2:40 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 48

மேலே