கோப் பெரும் தேவி 09022024
ஒரு கவிதையை
பெயராகக் கொண்டவர்
தோழி கோப் பெரும் தேவி...
மேலாண்மை செய்வதில்
வலுவூட்டப்பட்ட கான்கிரீட் என
கோப்ஸ் வல்லினம்.. இவர்
நட்பு பாராட்டி மகிழ்வதில்
மலரென இருக்கும் மெல்லினம்..
மரபுக்கவிதை புதுக்கவிதை
புனைவதில் இடையினம்..
அளந்து பேசுவார்.. சபை
அறிந்து பேசுவார்
குற்றியலுகரம் குற்றியலிகரம்
போன்று குறைந்து பேசுவார்..
விரைந்து செயலாற்றும் வேகம்
இன்னிசை அளபெடை
இசை நிறை அளபெடை..
நினைவிற்கு வந்து போகும்...
தமிழில் நல்ல பாடல்கள் தருவது
யாப்பிலக்கணம்... வையகத்தில்
நல்ல வீடுகள் தருவது
இந்த கோப்பிலக்கணம்..
கட்டிய வீட்டிற்குள்ளேயே பெண்கள்
இருந்து வந்தது அந்தக் காலம்
வீடுகள் கட்டுவதிலும் பெண்கள்
வீறு கொண்டெழுவது
கோப்ஸ் காலம்.. அதில்
உலகம் வெற்றி காணும்..
நாராயணனே நமக்கே பறை
தருவான்.. பாரோர் புகழப் படிந்து
ஏலோர் எம்பாவாய்...
திருப்பாவை வழி வாழும்
கோப்பெரும் தேவி எனும்
ஜிஸிஇ அமைப்பியல் பாவை...
வாழ்வின் சகல இலக்கிய
இலக்கணங்களுடன் வானம்
வசப்பட... வசந்தங்கள் வாழ்த்த
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
அன்புடன்...
ஆர். சுந்தர்ராஜன்
😀🙏🪷👏👍