குறும்பு கிருஷ்ணா
குறும்பு கிருஷ்ணா !
…..,…
வாயிலென்ன வெண்ணையா
வையகத்தின் உருவமா /
கையிலென்னக் கலையமா
கோபியரின் துகில்களா /
குழலிலென்ன கீதமா
குவலயத்தின் நாதமா /
மழலவயென்ப தில்லையா
மாயவனின் லீலையா /
அவதரிக்கும் போதெலாம்
அஞ்சுவார்கள் தீயோரே /
தவறிடாதத் தூயவரின்
தவமெல்லாம் நினதருளே /
சூழ்ச்சியெலாம் உந்தனுக்கு
சுகமான அனுபவமோ /
தாழ்ச்சியில்லா கௌரவரின்
துணையானாய் தந்திரமோ /
நல்லோர்கள் நலிந்தாலே
நான்வருவேன் என்றாயே /
போல்லார்க்கும் பொதுவாகப்
புனிதகீதைத் தந்தவனே !!
-யாதுமறியான்.