ஒற்றுமை வேண்டும்
ஒற்றுமை வேண்டும் !
———
சின்னஞ்சிறு கோழிக்குஞ்சே
சிக்கிக் கொண்டாயா /
தன்னந்தனியே வந்ததாலே தவித்துப் போனாயா /
பருவத்தை அடையுமுன்னே
பதற்றமும் எதற்காக /
வருவதையும் உணரந்திடவே
வயதுவர வேண்டாவா /
குழந்தையவள் கரங்களிலே
கொஞ்சிடக் கிடைத்தாயே/
அழுவதற்கு நேரமில்லை
அம்மாவைத் தேடுங்களே /
வெள்ளைநிறமே தூயதுதானே
வேறெதனைத் தேடுகிறீர்கள் /
கொள்ளையழகு உங்களையுமே
கொத்திடவே கழுகிருக்குதே /
குஞ்சுகளின் எதிரியெல்லாம்
கூடி வந்தாலும் /
பிஞ்சுமகள் காத்திடுவாள்
அஞ்சிட வேண்டாம்/
ஒன்றுபட்டு வாழும்போது
ஒன்றும் நடக்காது /
துண்டுபட்டுப் போகும்போது
தொல்லைகள் வரலாறே /
-யாதுமறியான்.