கேட்டு பாரடா

கேட்டு பாரடா
24 / 01 / 2024
பொறக்கும் போது போட்ட முடிச்சு
சொந்த பந்தமடா - அட
வாழும் போது மேலும் இறுகி
துன்பம் வந்ததடா
இறக்கும் போது முடிச்சவிழ்ந்து
போகும் கதையடா - அட
போட்டவன நீயும் போயி
கேட்டு பாரடா

வாழுறத பாத்து பாத்து
வயிறு எரியுமடா - அட
வீழுறத பாத்துபுட்டா
சிரித்து மகிழுமடா
துன்பமின்னு கேட்டுபுட்டா
தெறித்து ஓடுமடா - அட
இன்பமாய் வாழ்ந்துவிட்டா
மென்னு முழுங்குமடா

யாரைத்தான் நம்புறது
ஒன்னும் புரியலடா - இங்கு
அண்ணன் தம்பி உறவுன்னு
யாரும் இல்லையடா
உன்கையை நம்பி நீயும்
கரணம் போடுடா - அட
உன் விதிதான் என்று நாளும்
தொடர்ந்து ஓடுடா

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (24-Jan-24, 7:44 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : kettu paarada
பார்வை : 74

புதிய படைப்புகள்

மேலே