கருதி
டேய் தங்கவேலு,
@@@@
என்னடா முத்தையா?
@@@@@
நாம இரண்டு பேரும் நம்ம நிலத்தில் வேளாண்மையைக் கவனிக்குறதுக்காக ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பள்ளிக்குப் போறதை நிறுத்திட்டோம். நாம சரி வயசு. உனக்குத் திருமணம் ஆகி ஒரு மாதம் ஆனபிறகு என்னுடைய திருமணம் நடந்தது. இப்ப உன் மனைவி பொன்னிக்கு பெண் குழந்தை பிறந்து ஒரு வாரம் ஆகுது. நேத்து என் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்திருக்குது.
@@@@@@@#
மிக்சி மகிழ்ச்சிடா தங்கவேலு.
@@@@@@@
சரி குழந்தைக்குப் பேரு வச்சுட்டீங்களா?
@@@@#@
உம். 'சுருதி'னு பேரு வச்சிருக்கிறோம்.
@@@@@@@
இந்திப் பேரு தானே?
@@@@###
ஆமான்டா.
@@@##@#
தமிழ்ப் பேரை குழந்தைகளுக்கு வச்சா நம்ம சிற்றூர் மக்களே நம்மள மதிக்கமாட்டாங்க. அதனால்...
@@@@@@@
அதனால் உங்க குழந்தை 'சுருதி'ன்னா எங்க குழந்தைக்கு 'கருதி'னு பேரு வைக்கலாம்னு நினைக்கிறேன்.
@@@@@@@
'கருதி' தமிழ்ச் சொல்லா இருந்தாலும் 'சுருதி' இந்திப் பேரு மாதிரியே இருக்குதுடா. நம்ம மக்கள் 'கருதி'யை இந்திப் பேருன்னு நினைச்சுக்கவாங்க.
@@@@@@@
ஆமான்டா - சுருதி - கருதி. அருமையான பெயர்கள். வாழ்க.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்