இசைவரும்
பூவோடு நாரும் புதுமணம் வீசும் பொதுவிதியாய்
நாவோடு பூக்கும் நனித்தமிழ் வார்த்தை நலங்கலந்தப்
பாவோடு சேர்த்துப் பழரச மாக்கிப் பருகவிடத்
தீவோடு மோதும் திரைகடல் வெள்ளத் திசைவருமே!