அத்திப்பழம் சிவப்பா
அத்திப்பழம் சிவப்பா அத்தைமகள் சிவப்பா !!
——-/
அத்திப்பழம் சிவப்பா
அத்தைமகள் சிவப்பா /
சுத்திசுத்தி வந்தாலும்
சுந்தரிதான் நெருப்பா /
நகரத்திலே வாழ்ந்தாலும்
நாகரிகம் கண்டாலும் /அகத்தினிலே பண்பாடு
அமைதியாக வாழாதோ /
சேலைகளை மாற்றிவிட்டு
சிற்றுடைகள் போட்டாலும் /
காளையவன் பார்த்தாலே
கன்னிநிலம் நோக்குவாளே /
பட்டனத்துப் படிப்புகளும்
பக்குவத்தைச் சொல்லித்தரும் /
கெட்டவரை அடையாளம்
கண்டிடவே உதவிடுமே /
தோற்றமெலாம் அழகில்லை
பாசந்தானே பேரழகு /
நோற்றிடுவேன் தினந்தினமும்
நல்லாளின் கைப்பிடிக்க !!
-யாதுமறியான்.