நன்னயம் பேசி னாலே நண்பர்கள் பலவா யாகும் - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(1, 4 சீரில் மோனை)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)

நன்னயம் பேசி னாலே
..நண்பர்கள் பலவா யாகும்;
நன்பொருள் பேசப் பேச
..நட்புமே பலமா யாகும்!
மின்னிடுங் கருத்தி னாலே
..மேன்மையும் பலமே யாகும்;
முன்னையோர் சொன்னார் தாமே
..முழுமையுங் கேட்போம் நாமே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Jan-24, 6:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே