குலோத்துங்க சோழன் கோவை - நூல் - மூன்றாவது - வன்புறை

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.

மூன்றாவது - வன்புறை.

அஃதாவது-தலைவி ஐயுற்றவழி ஐயந்தீரத் தலைவன் வற்புறுத்திக் கூறல்;

அஃது-ஐயந்தீர்த்தல், பிரிவறிவுறுத்தலென இருவகைப்படும்;

அவை: அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் முதல் இடமணித்தென்றல் ஈறாகிய ஆறுவிரிகளையுடையன;

அவை வருமாறு:

அணிந்துழி நாணீயது உணர்ந்து தெளிவித்தல்.

பெருநயப் புரைத்தல்.

(இ-ள்) இனி, தலைவன் வருவானோ வாரானோவென்று தலைவி முகம் வேறுபட, அதைத் தலைவன் குறிப்பாலுணர்ந்து தனது மிகுந்த காதலைக் கூறுதல்.

கட்டளைக் கலித்துறை

மண்ணாடு காக்குங் குமார குலோத்துங்கன் வாழுறந்தைக்
கண்ணாடி யெங்குந் திரிவண்டு காள்கதிர் மாமதிக்கே
யுண்ணா ணுவதன்றி யம்மதி நாண வொளிரு(ங்)கஞ்சம்
பெண்ணார் முகக்கஞ்சம் போலவுண் டோநும் பெருந்தடத்தே! 24

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (31-Jan-24, 6:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே