சிந்தனை செய் மனமே
சிந்தனை செய் மனமே !!
' "நான் சிந்திக்கிறேன், ஆகையால் நான் இருக்கிறேன்." என்பது ரெனே டேக்கார்ட்
(France, 1596-1650) என்ற மெய்யியலாளரின் மெய்யியல் கருத்துரை ஆகும். "நான்" இருப்பதால் சிந்திக்க முடிகிறது என்ற கூற்றானது ஒருவருடைய இருத்தலை அல்லது தன் இருப்பை அத்தாட்சிப்படுத்துகிறது என்ற இலகுவான அர்த்தத்தை வழங்குகிறது .
நாம் எல்லோரும் சிந்திப்பவர்கள் தானே ?என்னுடைய அனுபவத்தில், மனம் எப்போதும் சிந்தித்துக் கொண்டே தான் இருக்கிறது; கனவு கூட சிந்தனை ஓட்டத்தின் விளைவோ?
ஒரு கணனியில் ஏதோ ஒரு 'பேக்ரவுண்ட் ப்ரோக்ராம்' போய்க் கொண்டிருப்பது போல அடி மனதில் ஏதோ ஒரு சிந்தனை ஓட்டம் போய்க் கொண்டேதான் இருக்கிறது.
என்னுடைய அனுபவத்தில் அடிக்கடி ஏதாவது ஒரு பாடலை அல்லது எப்போதோ படித்த ஒரு வரியை நான் நினைத்துக் கொள்வதுண்டு அது தற்செயலாக தானாக நிகழ்வது போல் இருக்கும். இதற்கு ஒப்புமை சொல்வது என்றால் இப்போது நீங்கள் கார் ஓட்டுகிறீர்கள் வழக்கமான பாதையில் உங்கள் வேலைக்கோ அல்லது உங்கள் வீட்டுக்கோ செல்கிறீர்கள். அப்போது நீங்கள் ஏதாவது பாட்டுக் கேட்டுக் கொண்டோ யாருடனாவது பேசிக்கொண்டே கூட இருப்பிர்கள். ஆனாலும் "இங்கே திரும்ப வேண்டும்' என நீங்கள் நினைத்துச் செயல் படாதது போல் தானாக வண்டி திரும்புவது போல் பழகிய பாதையில் செல்கிறது. அதை அப்போது நினைத்துத்தான் செய்வது இல்லை தற்செயலாக நிகழ்வது போலிருக்கும. வண்டி மாடு, ஓட்டுபவன் தூங்கிவிட்டாலும் தானே பக வேண்டிய பாதையில் செல்வதைப்போல.
உங்கள் எல்லோருக்குமே அப்படி ஒரு அனுபவம் இருக்ககலாம்; நீங்கள் எப்போதோ கேட்ட பாடல், எப்போதோ படித்த ஒரு வரி உள் மனதின் அடிநாதம் போல் மனதில் இசைத்துக் கொண்டே இருக்கும்.
எனக்கு அடிக்கடி அப்படியே நினைவுக்கு வருவது ஓரிரு பாடல்கள் அதில் ஒன்று "
'சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே என்ற பாடல்'
(Rambaiyin Kaadhal 1956. - Maruthakasi. )
இன்னொரு பாடல், தியாகராஜ கீர்த்தனையில் அருமை இரண்டு வரிகள்
'நானு பாலிம்ப நடசி வச்சிதிவோ'
இதன் தமிழாக்கத்தை அதே ராகத்தில் பாலமுரளி கிருஷ்ணா
பாடியிருக்கிறார்
'எனை ஆட்கொள்ள நடந்து வந்தாயோ'
இதுபோல உங்கள் அனுபவத்தையும் எழுதுங்களேன் சுவையாக இருக்கும் .
அப்படி நீங்கள் நினைக்கும் ஏதாவது ஒரு பாடலை அல்லது ஒரு வரியை எழுதுங்களேன் எல்லோரும் தெரிந்து கொள்ளலாம் !!