கனவுகள்
கனவுகள்
கனவுகள்..! நம்மை பொறுத்தவரை ஒரு இன்பமான உலகம், மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நம்பிக்கையாய் வாழ்க்கையை கொண்டு செல்வது கனவுகள் மட்டுமே.
இதை இப்படி சொல்லலாம் மனிதனால் முடியாத அல்லது நடக்காத காரியத்தை அவனால் கனவில் நடத்தி காட்டமுடியும்.
கற்பனையின் அடுத்த செயல்பாடாக, நம்மை கொண்டு செல்வது இந்த கனவுகள் ஆகும். நம்மால் கனவில் இறந்தவர்களை கூட உயிர்ப்பித்து நம்மோடு பேசிக்கொண்டிருக்கும்படி செய்ய முடியும். விடிந்த பின் இந்த கனவுகள் ஞாபகம் இருக்குமா? என்பது கேள்விக்குறியே.! என்றாலும் அதை மறப்பதற்கு முன் பிறரிடம் சொல்லி இதற்கு பரிகாரம் என்ன? என்பது போன்ற செயல்களில் நம்மை ஈடுபடுத்தி கொள்கிறோம்.
தெய்வகாரியங்களையும் இப்படி மனிதன் கனவில் கண்டதாக கூறி பகலில் இவன் கனவில் கண்ட சாமிகளை திருப்தி படுத்த கோயில் கட்டுவதோ அல்லது அன்னதானம் போன்ற ஒரு சில தொண்டுகளை செய்தோ மன சாந்தி கொள்கிறான்.
வேடிக்கையான் விசயம் என்னவென்றால் கனவால் முடியாத விசயங்களே கிடையாது. நீங்கள் ஆகாயத்தில் பற்ப்பீர்கள், ஒரே ஆள் ஒன்பது பேரை அடித்து வீழ்த்துவீர்கள், இன்னும் பல பல காரியங்களை செய்வீர்கள். உண்மையில் உங்களின் உண்மையான உடல்நிலையை அப்பொழுது கனவுகள் காட்டுவதில்லை.
கனவுகள் வருவது கூட அந்தந்த பருவத்துக்குரிய வகையில் வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. பெரும்பாலும் சிறுவர்கள் குழந்தைகளுக்கு கட்டுரை மேற்சொன்ன பறப்பது, விலங்குகளுடனும், பறவைகளுடனும் பேசுவது போன்ற நம்ப முடியாத வகையில் இருக்கும்.
அதே பதின்மர பருவத்தில் அவர்களது உணர்ச்சிகளின் அடிப்படையில் கனவுகள் அவர்களை அவஸ்தைக்குள்ளாக்கும். அவர்களால் இப்படி கனவுகளை கண்டு திருப்தி பட்டு கொள்ள கூடிய சூழ்நிலையில் காணப்படுவார்கள்.
நடுத்தர வயது (வர்க்கத்து) கனவுகள் அவர்களது இயல்பின்படி காணப்படும். முதுமையில் கனவுகள் மட்டுமே அவர்களை ஓரளவு இந்த உலகத்தில் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
கனவுகளை பற்றி யதார்த்தமான வகையில் இப்படி சொல்லி கொண்டு செல்லும்போது அறிவியல் பூர்வமாக என்ன சொல்கிறது என்னும் வகையில் “கூகிலில்” தேடும்போது:
அவை சொல்கிறது
கனவுகள் என்பது நாம் தூங்கும் போது நம் மனம் உருவாக்கும் கதைகள் மற்றும் படங்கள். கனவில் சில நன்மைகள் இருக்கலாம், பகலில் சேகரிக்கப்பட்ட தகவல்களை மூளை செயலாக்க உதவுகிறது.
அவை விஞ்ஞானிகள் மற்றும் உளவியல் மருத்துவர்களுக்கு ஒரு நீடித்த மர்மமான ஆதாரமாக இருக்கின்றன.
• நாம் கனவு கண்டதை நினைவில் கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் ஒவ்வொருவரும் ஒரு இரவில் 3 முதல் 6 முறை வரை கனவு காண்பதாகக் கருதப்படுகிறது
• ஒவ்வொரு கனவும் 5 முதல் 20 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று கருதப்படுகிறது.
• ஒருவர் படுக்கையில் இருந்து எழும்புவதற்குள் 95 சதவீத கனவுகள் மறந்து விடுகின்றன.
• கனவு காண்பது நீண்ட கால நினைவுகளைக் கற்றுக் கொள்ளவும், வளர்க்கவும் உதவும்.
• பார்வையற்றவர்களுடன் ஒப்பிடும்போது பார்வையற்றவர்கள் மற்ற உணர்ச்சிக் கூறுகளுடன் அதிகம் கனவு காண்கிறார்கள்.
நாம் ஏன் கனவு காண்கிறோம் என்பது பற்றி பல கோட்பாடுகள் உள்ளன. கனவுகள் தூக்க சுழற்சியின் ஒரு பகுதியா அல்லது அவை வேறு ஏதேனும் நோக்கத்திற்கு உதவுகின்றனவா?
சாத்தியமான விளக்கங்கள்
• உணர்வற்ற ஆசைகள் மற்றும் விருப்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது
• தூக்கத்தின் போது மூளை மற்றும் உடலிலிருந்து சீரற்ற சமிக்ஞைகளை விளக்குதல்
• பகலில் சேகரிக்கப்பட்ட தகவலை ஒருங்கிணைத்தல் மற்றும் செயலாக்குதல்
• உளவியல் சிகிச்சையின் ஒரு வடிவமாக வேலை,. சான்றுகள் மற்றும் புதிய ஆராய்ச்சி முறைகளிலிருந்து, கனவு காண்பது பின்வரும் செயல்பாடுகளுக்கு உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் ஊகித்துள்ளனர்:
தூக்க சுழற்சியில் தூக்கத்தின் ஐந்து கட்டங்கள் உள்ளன:
நிலை 1: லேசான தூக்கம், மெதுவான கண் இயக்கம் மற்றும் தசை செயல்பாடு குறைதல். இந்த நிலை மொத்த தூக்கத்தில் 4 முதல் 5 சதவிகிதம் ஆகும்.
நிலை 2: கண் இயக்கம் நின்று, மூளை அலைகள் மெதுவாக மாறும், ஸ்லீப் ஸ்பிண்டில்ஸ் எனப்படும் வேகமான அலைகள் அவ்வப்போது வெடிக்கும். இந்த நிலை மொத்த தூக்கத்தில் 45 முதல் 55 சதவீதத்தை உருவாக்குகிறது.
நிலை 3: டெல்டா அலைகள் எனப்படும் மிக மெதுவான மூளை அலைகள் சிறிய, வேகமான அலைகளுடன் குறுக்கீடு செய்யத் தொடங்குகின்றன. இது மொத்த தூக்கத்தில் 4 முதல் 6 சதவிகிதம் ஆகும்.
நிலை 4: மூளை டெல்டா அலைகளை கிட்டத்தட்ட பிரத்தியேகமாக உருவாக்குகிறது. 3 மற்றும் 4 நிலைகளில் ஒருவரை எழுப்புவது கடினம், இது ஒன்றாக "ஆழ்ந்த தூக்கம்" என்று அழைக்கப்படுகிறது. கண் அசைவு அல்லது தசை செயல்பாடு இல்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது விழித்தெழுந்தவர்கள் உடனடியாகச் சரிசெய்வதில்லை, மேலும் விழித்தபின் சில நிமிடங்களுக்கு அடிக்கடி திசைதிருப்பப்படுவார்கள். இது மொத்த தூக்கத்தில் 12 முதல் 15 சதவிகிதம் ஆகும்.
நிலை 5: இந்த நிலை விரைவான கண் இயக்கம் (REM) என்று அழைக்கப்படுகிறது. சுவாசம் வேகமாகவும், ஒழுங்கற்றதாகவும், ஆழமற்றதாகவும் மாறுகிறது, கண்கள் பல்வேறு திசைகளில் வேகமாக அசைகின்றன, மேலும் மூட்டு தசைகள் தற்காலிகமாக முடக்கப்படுகின்றன. இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, ஆண்களுக்கு ஆண்குறி விறைப்பு ஏற்படுகிறது. REM தூக்கத்தின் போது மக்கள் விழித்தெழுந்தால், அவர்கள் அடிக்கடி வினோதமான மற்றும் நியாயமற்ற கதைகளை விவரிக்கிறார்கள். இவை கனவுகள். இந்த நிலை மொத்த தூக்க நேரத்தின் 20 முதல் 25 சதவிகிதம் ஆகும்.
நரம்பியல், விரைவான கண் இயக்கம் நம்பகமான மூல (REM) தூக்கத்தின் கட்டத்துடன் இணைக்கப்பட்ட விளக்கங்களை கனவுக்கான காரணத்திற்கான சாத்தியமான வேட்பாளராக வழங்குகிறது.
கனவுகள்
கனவுகள் துன்பகரமான கனவுகள் ஆகும், இது கனவு காண்பவருக்கு பல குழப்பமான உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது. ஒரு கனவுக்கான பொதுவான எதிர்வினைகள் பயம் மற்றும் பதட்டம் ஆகியவை அடங்கும்.
அவை பெரியவர்கள் மற்றும் குழந்தைகளில் ஏற்படலாம், மேலும் காரணங்கள் பின்வருமாறு:
மன அழுத்தம்
பயம்
அதிர்ச்சி
உணர்ச்சி சிக்கல்கள்
உடல் நலமின்மை
சில மருந்துகள் அல்லது மருந்துகளின் பயன்பாடு.
இப்படியாக அறிவியல் ரீதியான விளக்கங்களை வைக்கிறது. நம் கட்டுரை அறிவியல் ரீதியான விளக்கங்களை கொடுத்து நம்மை போன்ற சாதாரண மனிதர்களை மன சிக்கலுக்கு உண்டாக்குவது நோக்கமல்ல.
காரணம் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் சுவாரசியமாக கொண்டு செல்வது “நாம் காணும் கனவுகள்” மட்டும் தான். நிஜ வாழ்க்கையில் அன்றாடம் நாம் படும் துன்பங்கள், துயரங்களுக்கு வடிகாலாய் இருப்பது இவையன்றி வேறு என்ன?
நகைச்சுவையாகவே பார்ப்போமே ! நேற்று வந்த கனவில் நம் தெரு, அல்லது வீதி முழுக்க இடைவிடாமல் குடிநீர் வந்து கொண்டிருந்தது. விடிந்து காலையில் தான் நம் தெருவிற்கு குடி நீர் வந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆன உண்மை உரைக்கிறது. அந்த கனவிலாவது நாம் சந்தோசத்துடன் இருந்தோம் அல்லவா..!
இப்படி கனவுகள் நம்மை உண்மையிலேயே மகிழ்ச்சியாகத்தான் வைத்திருக்க முயற்சி செய்கின்றன என்றாலும், பல பயங்கரமான கனவுகள் காண்பவர்கள், அல்லது தாங்களே ஏதோ சிக்கலில் மாட்டிக்கொள்வதாக கனவுகளை கண்டு கொண்டிருப்பவர்கள் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
ஆனால் மனித வாழ்க்கை என்பது சமுதாய சிக்கலுக்குள் பின்னி பிணைந்து வெளி வரமுடியாமல் தவித்து கொண்டிருப்போர்க்கு இது ஒரு “அருமருந்து” என்பதை ஒப்புக்கொள்வார்கள்.
இந்த கனவின் வழி ஒட்டியே, கனவுகளை கண் முன்னால் கொண்டு வருவதற்கு திரைப்படங்கள், குறும்படங்கள் போன்றவைகள் உருவாகின்றன. (அதிலும் சில இயக்குனர்கள் சினிமாவை கனவாக காட்டாமல் இயல்பு வாழ்க்கையாக காட்டுவதற்கு முயற்சி செய்து ஒரு சிலர் மட்டுமே வெற்றி அடைகிறார்கள்). இதற்கு காரணம் மனிதன் கற்பனை, கனவு வாழ்க்கைக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கிறான் என்பது தெரிகிறது.
உண்மைதான் மனித குலம் தோன்றியதலிருந்து அவர்களால் படைக்கப்பட்ட அனைத்து கலைகளும் இலக்கியங்களும், படைப்புக்களும் (ஓவியம்,சிற்பம்,நாட்டியம், பாட்டு, இன்னும் பல பல..) இந்த கற்பனைகள், கனவுகள் இல்லாமல் படைத்திருக்க முடியுமா?