நறுந்தொகை 32
குறள்வெண் செந்துறை
சிறியோர் பெரும்பிழை செய்தன ராயிற்
பெரியோர் அப்பிழை பொறுத்தலும் அரிதே! 32
- அதிவீரராம பாண்டியர்
பொருளுரை:
கீழோர் பெரிய குற்றங்களைச் செய்தாரானால், மேலோர் அக்குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுதலும் அரிதேயாம்.
சிறியோர்கள் பெரும் பிழைகளைச் செய்தால் பெரியோர் அவற்றைப் பொறுத்தலும் அருமையாம்.
பெரியோர் பொறுப்பரென்று கருதி அவரிடத்துப் பெரும்பிழை செய்தல் கூடாது என்க!
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

நீ ஓர்...
கவின் சாரலன்
29-Mar-2025

போகுமிடம் வெகு...
Ashok4794
29-Mar-2025
