பேரின்பம் தந்திடுவான் கண்ணன்
மனதிற்கி நியவனவன் மணிவண்ணன் கண்ணனை
மனத்தால் நினைத்த வனைமனமு ருகிப்பாட
சென்றவினை சேரும்வி னையெலாம் போக்கியே
என்றென்றும் நிரந்தரமாம் பேரின்பம் தந்தருள்வான் கண்ணன்