சந்தோஷமாக வைத்த பெயர்

நம்ம சிற்றூருக்கு சாலை வசதி இல்லை. மின்சார இணைப்பு இருக்குது. வீட்டுக்கு ஒரு தொலைக்காட்சிப் பெட்டி. அரசாங்கம் கொடுத்தது. திரைப்படம் வந்த காலத்தில் நம்ம கொள்ளுத்தாத்தா கொள்ளுப்பாட்டி எல்லாம் அஞ்சு மைல் (8 கி.மீ) நடந்து போய் திரைப்படம் பார்த்தாங்களாம். அந்த சுகம் இப்ப வீட்டிலேயே கிடைக்குது. அந்தக் காலத்தில் இருந்து இன்னிக்கு வரைக்கும் நம்ம ஊரில் யாருக்கும் தமிழ்ப் பேரு கிடையாது.
@@@@@
ஆமாம் பெரியப்பா, எல்லார் வீட்டிலயும் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறதால தமிழ் மட்டும் இல்லாம இந்தி நிகழ்ச்சிகளையும் மக்கள் பார்க்க ஆரம்பிட்டாங்க. அதனால் குழந்தைகளுக்கு நமக்குப் பிடித்த இந்திப் பேருங்களை வைக்க வசதியா இருக்குது.
@@###@@
சரிடா தரனேசு போன வாரம் பிறந்த உன் பையனுக்கு என்ன புருடா வச்சிருக்கிறீங்க.
@@@@@@@
பெரியப்பா புதுமையான பேரா வச்சுட்டோம்.
@@@@£
அந்தப் பேரைச் சொல்லுடா தரனேசு.
@@@@@@@
நஃப்ரத்.
@@@####@
புதுமையான பேருடா. உலகத் தமிழர் யாரும் அவுங்க பிள்ளைகளுக்கு வைக்காத பேரு. அந்தப் பேருக்கு என்னடா அர்த்தம்?
@@@@@@@

அர்த்தம் யாருக்கு? எதுக்கு? இந்திப் பேரை நம்ம தமிழ் குழந்தைகளுக்கு வைக்கிறதே பெருமைக்குரிய விஷயம்.
@@@@@@@@@
சரிடா தரனேசு. இந்தப் புதுமையான பேரை உன் பையனுக்கு நீ சந்தோஷமா வச்சிருக்கிற பேரே பாராட்டுக்குரிய அரிய செயல்டா தரனேசு. நீ ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு சிறந்த முன்னோடியாக இருக்கிற. சிந்தாபாத்துடா தரனேசு.
@@@@@@@@@@@@@

Nafrat = Hatred

எழுதியவர் : மலர் (14-Feb-24, 10:39 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 96

மேலே