பிரியமானவள்

நான் சேரை நகர்த்தி போட்டு அமர்ந்து கொண்டேன்.வாசல் வெளிச்சம் வழிந்து உடலை நனைத்தது.அருகிலிருந்த பிரியாவின் முகம் அயர்ந்து தூங்கியபடி இருந்தது.தலையில் லேசாக இரத்த காயம் படிந்திருந்தது.அதில் ஒட்டிய தலைமுடி லேசாக காற்றில் ஆடியபடி இருந்தது.நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.இரண்டு நாளாக அவள் சரியாக தூங்கவில்லை என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள்.கால்கள் முழுவதும் கட்டுபோடப்பட்டிருந்தது.நான் சன்னல் அருகே சென்றேன்.அருகிலிருந்த மாமரத்தில் இரண்டு கிளிகள் கீச்சிட்டன.நான் அதையே பார்த்துக் கொண்டிருக்க உள்ளே அப்பொழுது தான் அம்மா காபி கொண்டு வந்தாள்

இந்தாடா பாத்து சூடா இருக்கு

அவளும் அந்த கிளிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே, "ரொம்ப அழகா இருக்கு மவுண்ட் ரோட்ல ஒரு கடையில இதே போல ரெண்டு கிளி என்ன அழகா பேசுதுங்கிற அப்படியே தூக்கிட்டு வந்துடலாம்னு பாத்தேன் பிரியா தான் வேணாம்னு சொல்லிட்டா சரி சரி தலைக்கு மேல வேல கிடக்கு நான் போய் உங்களுக்கு டிபன் செய்றேன் நீ பிரியா எழுந்தா ப்ளாஷ்க்ல இருக்க காபிய ஊத்தி கொடு பாத்து அவளால சரியா பிடிச்சுக்க முடியாது"

டாக்டர் வரேன்னு சொன்னாரா

இல்ல ரெண்டு நாளைக்கு ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கிறாரு

நான் வேணா பேசவா

எதுவும் வேணாம்

இல்ல அவள இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு

அம்மா அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை.நான் அவளருகில் அமர்ந்து செய்தித்தாள்களை வாசித்தபடி இருந்தேன்.சில நிமிடங்களில் அவள் விழித்து என்னை பார்த்து திகைத்தபடி
ஆனந்த் எப்ப வந்திங்க

இப்ப தான் ஏ ஏ ரொம்ப ஸ்டிரைன் பண்ணாத இரு அவளை தூக்கி நிமிர்ந்து உட்கார வைத்தேன்

ஒரு போன் பண்ணல பார்த்தியா என் கால்கட்ட

பார்த்து போறதுதான பிரியா அப்படி என்ன அவசரம்

லீவ் இட் இப்ப அத பத்தி பேசி என் மூட ஸ்பாயில் பண்ணாத

சரி ஓகே இந்தா இந்த காஃபிய குடி

இரு நான் போய் குளிச்சிட்டு வரேன்

கொஞ்சம் பொறு நான் தூக்கிட்டு போறேன்

ஐயோ நீ தூக்கற கொடுமைய வேணாம் நல்லா இருக்க இன்னொரு காலையும் உடைக்கலாம்னு பாக்குறியா அவள் சிரித்தாள் முகத்தில் குழி விழுந்து மறைந்தது

என்ன அப்படி பாக்குற கொஞ்சம் சப்போர்ட் பண்ணு போதும்

நான் கைத்தாங்கலாக அவளை தூக்கி நிறுத்தினேன். அவள் கூந்தல் வழிந்து என் முகத்தை அப்பியது

அவளை பாத்ரூமில் விட்டுட்டு திரும்பிய போது பிரியாவின் குரல் உனக்கு "இன்னிக்கு லீவ் தான இல்ல பர்மிஷனா"

எஸ் லீவ் கேட்டு இருக்கேன் ஒரு ஒன் வீக் இங்கதான்

சரி ஓகே அந்த கபோர்ட்ல ஒரு பிங்க் சுடி இருக்கும் அதோட, என்னோட இன்னரும் அவள் தயங்கினாள்

நான் கொடுத்து விட்டு அமர்ந்தேன்.தண்ணீர் இறையும் சத்தம் ஃபேன் காற்றின் ஓசையுடன் சலசலத்தது.
சமையலறையில் குக்கரின் அலறல்.அம்மா கண்ணீர் கசிய வெங்காயம் அரிந்தபடி  தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஆனந்த் கொஞ்சம் வர்றியா" கதவை திறந்தபடி வெளியே வந்து என்னை அழைத்தாள்.நான் செய்தித்தாளை வீசிவிட்டு அவளருகே சென்றேன்.காதில் சோப்புநுரை பூக்களை சுற்றியது போலிருந்தது.நான் கொஞ்சம் தண்ணீர் பிடித்து அதை துடைத்தேன்.

நாரதர் மாதிரி இருந்ததுதா அவள் சிரித்தாள்

"ஆமா லேடி நாரதர்"

பின்னர் அவளை கட்டிலில் உட்கார வைத்தேன்.கூந்தலில் சொட்டிய ஈரம் அவள் உடையை நனைத்தது.

காபி குடி பிரியா

நான் பிளாஸ்க்கிலிருந்து ஊற்றினேன்

நீ குடிச்சியா

வந்ததும் அம்மா கொடுத்தாங்க

அவள் கைகள் உதற பெற்றுக் கொண்டாள்

ஹே சாரி நான் ஊட்டி விடுறேன் கொடு

"டோன்ட் வொர்ரி நான் குடிச்சிடுவேன்" அவள் இதழ்கள் விரிந்து காபியை உறிஞ்சின.முன் முடி இரண்டு காற்றில் படபடத்தது.நான் மெதுவாக அதை தூக்கி விட்டேன். அவள் "தாங்க்ஸ்" என்றாள்

அம்மா இரண்டு தட்டில் பூரி வைத்து கொண்டு வந்து கொடுத்தாள்"ஆனந்த் பிரியாவுக்கு நீயே ஊட்டி விட்டுடு"

நான் அவளை பார்க்க அவள் மெல்ல சிரித்தாள்

----

இரவு அம்மா சீக்கிரமாக உறங்கிவிட்டாள்.நான் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்க அப்போது பிரியா தான் கால் செய்தாள்

ஆனந்த் கொஞ்சம் இங்க வரீயா டாய்லெட் போகணும்.அம்மா நல்லா தூங்கிட்டாங்க போல

நான் அவளிடம் சென்றேன். அவள் தன்னை வருத்தி எழ முயன்று கொண்டிருந்தாள்

இரு பிரியா நான் தான் வரேன்னு சொன்னேன்ல

நான் உன்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்றேனா சாரி ஆனந்த்

நான் அவள் சொல்வதை காதில் வாங்காமல் தூக்க தொடங்கினேன்
அவளை பாத்ரூமில் அமர வைத்துவிட்டு வந்த போது என் கண்கள் கலங்கி இருந்தது.அம்மா பீபீ மாத்திரை போட்டு நன்றாக உறங்கி கொண்டிருந்தாள்.பிரியாவை மீண்டும் தூக்கி வந்து படுக்க வைக்க முயல
"ஆனந்த் கொஞ்சம் என்ன மாடிக்கு கூட்டி போறீங்களா"

மழை வர்ற மாதிரி இருக்கு பிரியா அவசியம் போகணுமா

ப்ளீஷ் ஆனந்த் வானத்த பார்த்து ரொம்ப நாளாச்சி

அவள் குழந்தையை போல கெஞ்சுவதை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது.

நான் அவளை அழைத்துக் கொண்டு மாடிக்கு வந்த போது வானில் நட்சத்திரங்கள் கரையத் தொடங்கின.மெல்லிய மேகமூட்டம் நகரத் தொடங்கியிருந்தது. அவள் ஏதோ இந்தி பாடலை முனுமுனுத்துக் கொண்டிருந்தாள்.

"ஆனந்த் இந்த கிளைமேட் எவ்வளவு நல்லா இருக்கு பாத்திங்களா. இதோ  இந்த அடர்ந்த இரவும், குளிர்ந்த காத்தும் என்ன ஒரு ரம்மியமான காட்சி. இப்ப தான் நான் மூச்சு விடுற மாதிரி இருக்கு"
அவள் என் கைகளை பிடித்துக்கொண்டு, எனக்காக எதாவது பாட்டு பாடுறீங்களா ப்ளீஷ்

பாட்டா ஏய் எனக்கு உண்மையா பாட வராது

ப்ளீஷ் ஆனந்த் எனக்காக ஒரு ரெண்டே ரெண்டு வரி

சற்று தயக்கத்திற்கு பின் குரல் அதிர பாடினேன்

அவள் விழி அசையாது என்னை பார்த்தாள்

உன் குத்தமா என் குத்தமா
யார நானும் குத்தம் சொல்ல

"அய்யோ ஆனந்த் அர்த்த ராத்திரில ஏன் இப்படி ஒப்பாரி வைக்கிறீங்க வேற பாட்டே தெரியாதா உங்களுக்கு" சிரித்தாள்

இல்ல பிரியா நான் தான் சொன்னேன்ல எனக்கு பாட வராது.சரி எனக்கு பிடிச்ச சாங்ஸ் சொல்றேன் நீ வேணா பாடேன்

அவள் சம்மதித்தாள்

தெய்வீக ராகம்
தெவிட்டாத பாடல்
கேட்டாலே போதும்

என் இனிய
பெண் நிலாவே

எனக்கு பிடித்த
பாடல்
அது உனக்கும்
பிடிக்குமே

நீ பார்த்த
பார்வைக்கொரு நன்றி

எக்ஸலண்ட் பிரியா ரொம்ப அழகா பாடுற என்னை மறந்து கைத்தட்டினேன்

ஆனந்த் உங்களுக்கு தெரியுமா நான் சிங்கிங் காம்பிடிஷன்ல ஸ்டேட் லெவல்ல பர்ஸ்ட் பிரைஸ்

வாவ் ஒன்டர்புல்

ஆனந்த் நீங்க நல்லா டிராயிங் வரைவீங்கன்னு அம்மா சொன்னாங்க

ஆமா ஆனா இப்ப இல்ல

சரி உங்களுக்கு கவிதை எழுத பிடிக்குமா

ஆமா ஆனா இது அம்மாக்கு தெரியாதே

ஒரு நிமிஷம் இருங்க
தன் கையிலிருந்த மொபைலை உயிர்ப்பித்தவள் என் டைரியில் புகைப்படமெடுத்த சிலவற்றை காண்பித்தாள்

உனக்கு எப்படி இது கிடைச்சுது பிரியா

ஓ அதுவா கால் ஓடஞ்சு போர் அடிச்சப்ப அம்மாகிட்ட படிக்க ஏதாவது புக்ஸ் கிடைக்குமான்னு கேட்டேன். அவங்க பரண்லயிருந்து தேடி ஒரு பெட்டிய கொடுத்தாங்க அதுல இருந்தது தான் இதுவும்

அவளை பார்க்கவே இப்பொழுது கூச்சமாக இருந்தது

சிறு செருமலோடு பிரியா அதுல இருந்த  எல்லாத்தையும் படிச்சிட்டியா

ஆமா எல்லாமே படிச்சேன்

என்ன ஆனந்த் ஒருமாதிரி இருக்கிங்க உங்க பர்மிஷன் இல்லாம டயரிய படிச்சிட்டேன்னு கோபமா

இல்ல பிரியா அப்படியெல்லாம் இல்ல என் முகம் என்னையறியாமல் வெட்கியது.பின் இருவரும் கீழே வந்த போதும் என்னால் உறங்க முடியவில்லை. வெளிய வந்து சிகரெட் புகைக்க தொடங்கினேன் மணி நான்கை நெருங்கும் போது கண்கள் அயரத் தொடங்கினேன்

வாசலிலிருந்து யாரோ அழைத்தது போலிருந்தது.அத்தை பத்மா.

அய்யோ என்ன மாப்ள நீங்க கொட்டுற பனியில இப்படி சட்டைக்கூட போடாம இப்படி வெளிய படுத்து இருக்கீங்க செருப்பை அவிழ்த்தவாறே கேட்டாள்

இமைகளை கசக்கியவாறே, "காத்து வாங்க வெளிய வந்தேன் அத்தை, அப்படியே தூங்கிட்டேன் போல; சரி வாங்க அத்த உள்ளே போலாம்" நாங்கள் உள்ளே நுழையும் போது அம்மா கூந்தலை முடிந்தவாறே எதிரே வர, அத்தை அவளை "என்ன அன்னி, எப்படி இருக்கீங்க"

ஆனால் அம்மா எதுவும் பேசாமல் முகத்தை திருப்பிக்கொண்டு செல்ல, அத்தை முகம் சுருங்கி போனாள்.

"சரி விடுங்க அத்த" நான் அவளை பிரியாவிடம் அழைத்துச்சென்றேன். பிரியா கண்களை இறுக மூடி தியானம் செய்துக்கொண்டிருக்க, நான் அவளை அழைக்க முயல, அத்தை என்னை தடுத்தாள். நாங்கள் மெதுவாக அவளருகில் அமர்ந்தோம். அவள் கூந்தல் ஃபேன்காற்றில் சிறகடித்தது.

ஒருவழியாக அவள் தியானத்தை முடித்து எங்களை நோக்கியபொழுது விடிந்திருந்தது.தலைமாட்டிலிருந்து சூரியன் ஜொலித்தது.

அத்தை அவளிடம் "எப்படி மா இருக்க மாப்ள தான் சொன்னாரு ரொம்ப வருத்தமா போச்சு.ஆஸ்பிடல் வந்து பார்க்கலாம்னு பார்த்தேன்.அதுக்குள்ள கவிதாக்கு பிரசவ வலி வந்துடுச்சு.விட்டுட்டு வர முடியல.கவிதாவும் கூட வர்றதா சொன்னா நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன்.அன்னி கோபத்துல எதாவது சொல்லிட்டா நிச்சயமா அவ தாங்கமாட்டா அதான்

"என்ன குழந்தை" பிரியா கேட்டாள் அம்மா அப்போதுதான் காபியோடு உள்ளே நுழைந்தாள் அவள் முகமெல்லாம் வேர்த்து போயிருந்தது.அத்தை காபியை கைகள் நடுங்க பெற்றுக்கொள்ள அம்மா சன்னலோரமாக சென்று எதையோ வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.

"ஆண் குழந்தை" ஒருகணம் அத்தை அம்மாவை பார்க்க அவள் எதையுமே கவனிக்காதது போலிருந்தாள்

நான் எழுந்து அம்மாவிடம் செல்ல முயல அத்தை கையசைத்து என்னை அமரச் சொன்னாள்

"அப்ப நா கிளம்பறேன் மாப்ள. பிரியா உடம்ப பாத்துக்கம்மா. வர்ற அவசரத்துல எதையும் வாங்க முடில இந்தாம்மா இத வச்சுக்க" ஒரு ஐநூறு ரூபாய் தாளை அவளிடம் கொடுக்க பிரியா வாங்க மறுத்தாள்

அம்மா அப்போது எங்களை கடந்தபடியே "ஆனந்த் டிபன் ரெடி பண்ணி இருக்கேன் சாப்பிட்டுட்டு போக சொல்லு"

அத்தை சாப்பிட்டுவிட்டு கிளம்பியபின் அம்மா கோவிலுக்கு சென்றாள்.நானும் பிரியாவும் கேரம்போர்டு ஆடத்தொடங்கினோம்

நான் வலது கையில் ஆடக்கூடாதென்று பிரியா கட்டளை விதித்தாள்

நான் எந்த கையில ஆடினாலும் நீ தான் ஜெயிப்ப பிரியா ஏனா எனக்கு ஆடவே தெரியாது

பிரியா சிரித்தபடி சரி ஒரு பெட் வச்சிக்கலாம் ஆட்டத்துல யார் ஜெயிக்கிறோமோ அவங்க மத்தவங்க சொல்றத இன்னிக்கு ஃபுல்லா கேக்கணும் ஓகேவா

நான் உள்ளூர பயத்தோடு ஓகே சொன்னேன்

நான் ஆடிய விதத்தை கண்டு பிரியா சிரித்தபடி இருந்தாள்.என்ன மேன் நீ கேரம் ஆட சொன்னா பவுலிங் போட்டுட்டு இருக்க

பாதி நேரம் நான் ஸ்டிரைக்கரை பறக்கவிட்டு கொண்டிருந்தேன்.ஒருவழியாக நான் ஆட்டத்தில் போராடி தோற்றேன்

பிரியா குதுகலமாக மிஸ்டர்.தோத்தாங்கோலி இந்த கேரம்போர்ட கீழ வச்சிட்டு எங்கிட்ட வாங்க

நான் அவளருகே செல்ல அவள் தலையணை அடியிலிருந்து என் டயரியை எடுத்து இதுல ஒரு லைன் நீங்க எழுதி இருக்கீங்க ப்ளீஷ் எனக்காக அத கொஞ்சம் படிங்க.

அவள் கொடுத்த பக்கத்தில் எழுதியிருந்தது

கடலை அள்ளிய வான்
மேகம் சரிந்து பொழிய மழை
கரைசேர்ந்தன காகங்கள் தன்
மரங்களுக்கும் வியர்வை
சப்தம் நி-சப்தம்
அன்பே உன் உள்ளங்கையில் வீசும்
மலரின் வாசம்
விழித் தீயிருக்கும் பார்வையில்
.......

நான் படிப்பதை நிறுத்தி அவளை பார்த்து "பிரியா இனி ரொம்ப வல்கரா இருக்கும் வேணாம்"

சரி கொடு நான் படிக்கிறேன்

இல்ல இல்ல நானே படிக்கிறேன்


ஆடைகளற்ற நிர்வாண குவளைகள்
நாம் குடிக்கும் முத்தங்கள் அத்தனையும்
தேன் ஊறும் எறும்பாய்
காமம்....

பிரியா என்னை அணைத்து முத்தமிட்டாள் அவள் கண்கள் ஏங்கி தவித்தன

பிரியா நான் சொல்றத கேளு பிரியா இந்த நிலமைல..

மிஸ்டர்.தோத்தாங்கோலி மூடிட்டு வர்றீங்களா எல்லா கதவையும். எனக்கு எல்லாம் தெரியும் கவிஞரே

கதவுகள் அடைத்ததும்
நான் அவளுக்காக ஒரு கவிதை பாடினேன்
எனக்காக அவள் சில பாடல்கள்
வாசித்தாள்

முதலிரவில் அவள் சொல்லியதை மீண்டும் நான் அவளிடம் கேட்டேன்

பிரியா நானா சொல்ற வரைக்கும் நமக்குள்ள எதுவும் இல்லன்னு பர்ஸ்ட் நைட்ல சொன்னீயே அதப்பத்தி அம்மா எதுவும் கேக்கலீயா

கேட்டாங்க தான்

நீ என்ன சொன்ன

நான் உங்கள நிறைய புரிஞ்சிக்கணும்னு சொன்னேன்.சம்பிரதாயமா இல்லாம முழு காதலோடு தான் நாங்க ஒண்ணுசேரணும்னு சொன்னேன்

இப்ப என்ன முழுசா புரிஞ்சுக்கிட்டியா பிரியா

அவள் என்னை கட்டியணைக்க அவள் கண்ணீர் தோளில் ஒழுகியது

எழுதியவர் : S.Ra (13-Feb-24, 9:55 pm)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 179

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே