கத்திரி

அத்தை உங்க பேரனுக்குப் புதுமையான இந்திப் பேரு வச்சிருக்கிறதாச் சொன்னீங்களே அந்தப் பேரைக் கொஞ்சம் சொல்லுங்க அத்தை.





@@@@@@@@@@@@@@@

சொலிட்டாப் போச்சு. அதுக்கென்னடா சிவதாசா.



@@@@@@@@

அத்தை என்ற பேரு சிவதாசன் போனவாரம் வரையிலும் தான். அது தமிழாக்கம் செய்யப்பட்ட இந்திப் பேரு. எனக்கு அது பிடிக்கல. நான் தமிழ்ப் பற்றுள்ள தமிழனா என் பேரை 'ஷிவ்தாஸ்'னு மாத்திட்டேன். தமிழ்ப் பேருங்களைப் பிள்ளைகளுக்கு வைக்கிற யாருமே தமிழர்கள் இல்லை என்பது தான் தமிழரின் பொள்கை, கோட்பாடு, நாகரிகம். இனிமேல் என்னை 'ஷிவ்'ன்னே கூப்பிடுங்க அத்தை.

@@@@@@@

சரிடா 'சிவ்வு'. என்ற பேரன் பேரு 'கத்ரி'. இன்னிக்கு செய்தித்தாள்ல ஒரு பஞ்சாப்புக்காரர் பேரு 'கத்ரி'னு முடியற பேரைப் பார்த்த்தேன். நம்ம ஊர்ல யாரும் அந்தப் பேரோட எந்தக் குழந்தையும் இல்லை. அதனால புதுமையா இருக்கட்டுமேன்னு என்ற பேரனுக்கு அந்தப் பேரை வச்சுட்டோம். பேரு நல்லா இருக்குதாடா சிவ்வு.

@@@@@@

அருமையான பேரு அத்தை. அருமை. அருமையோ அருமை. 'கத்ரி' சிந்தாபாத்து. வாழ்க!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Khatri

எழுதியவர் : மலர் (13-Feb-24, 10:08 am)
சேர்த்தது : மலர்91
Tanglish : kaththiri
பார்வை : 44

சிறந்த கவிதைகள்

மேலே