செந்தமிழும் நாப்பழக்கம்
சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
மகனே
துணிவாக நீயும் பேசி பழகிடு
தமிழை மூச்சாக நீயும் பதிவிடு
தாய்த் தமிழை சீரழிக்க
புறப்படுதே ஒரு பொய்க்கூட்டம்
இனம் அறிந்து அதை
வென்றிடு
பிற மொழியை இழிவாக
எண்ணிடாதே
வம்புக்கு வந்திட்டால்
இணங்கி நீயும் சென்றிடாதே
தலைவணங்கா தன்மானச்
சிங்கம் நீ
தமிழனென்று உரக்க
நீயும் முழங்கிடு.