காதலைப் போற்றிடும் வகையது மின்பமே - கலித்துறை
கலித்துறை
(விளம் 5)
(1, 3 சீர்களில் மூனை)
கனிவுட னுன்றனைக் களிப்புடன் நினைந்துமே
..மகிழ்வதும்
இனிதென வெண்ணியே வின்பமும் பெற்றிடல்
..சிறப்பதாம்!
வனிதையுன் பார்வையில் வையமு மயங்கிடும்
..நிசமதே;
புனிதமாங் காதலைப் போற்றிடும் வகையது
..மின்பமே!
- வ.க.கன்னியப்பன்