உனக்குள் என்னைத் தொலைத்தேன்
தேவதையே உன்னழகில்
என்னிதயம் பறிபோச்சே// 1
உனக்குள் என்னையே
தொலைத்தேன் என்னுயிரே//2
உள்ளத்தின் நினைவாக
உன்னையே நாடுகிறேன்//3
உறக்கம் வந்தாலும்
உன்னினைப்புக் கொல்லுதடி//4
தூக்கத்தைத் மறந்தே
துடிக்கின்றேன் வெகுநாளாய்//5
உண்பதற்கு உணவெடுத்தால்
உந்தன்முகம் கோப்பையிலே//6
பருகும் கனிரசமாய்
தித்திக்க வாநிலவே //7
அழகுக் குரல்கேட்டால்
ஆனந்தம் கொள்வேனே// 8
ஆடும்மயில் ஆட்டத்தைக்
கண்டும் ரசிப்பேனே//9
கூடியே வாழ்ந்திங்கு
உறவாடி மகிழ்வோமே//10
கவிதாசன்