நினைவலைகளின் நிழல்கள்
நினைவலைகளின் நிழல்கள்
+++++++++++++++++++++++++++
சித்தப்பனுக்கு வாக்கப்பட்டு
சித்தியாக வேண்டியவளே
சில்லைரக்கு ஆசைப்பட்ட
சின்னப்புத்தி அப்பனால
சிருக்கி உன்னை
சின்னப்பையன் கைப்பிடித்தேன்
சிவராத்திரி முழிப்பிருந்ந
சிவலோகம் அடையாளமுனு
சிவபக்தர் கூறிடுவார்..
சிவராத்தி முழிப்பிருந்து
சீர்மிகு மூணாறுக்கு
சீதேவினு காணவந்தேன்
மூதேவி நீயென அறியாமல்..
சிரித்தபடி வந்து பார்த்து
சம்மதம் நானும் சொல்ல
சித்திரையில் மணமுடித்து
சீரழிந்த கதையுண்டு..
உதிர்ந்த பூவட்டாம்
உதிர்த்துவிட்டு போனபோது
உனக்கு தெரியது
உதிர்ந்த பூ தளிருமுனு
வீழ்வேனென்று நினைத்தாயோ
வீழ்ந்தாழும் தளிரும்
வாழையடி நான்
வாழ்வேன் வளர்வேன்
உன் எதிரே வருவேன்
காத்திரு. ...காத்திரு....
அப்போது அறிவாய்
நான் யாரென்று...
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்