விருச்சிகராசியில் ஈஸ்வரன் கிபி 2000 பாகம் 2
விருச்சிகராசியில் ஈஸ்வரன் கிபி 2000 : பாகம் 2
++++++++++++++++++++++++++++++++++
கல்லூரிப் பாடம் கற்குமின்னே
கல்யாணப் பாடம் கற்க
கரைசேராக் கப்பலாக தடுமாறி
காகிதக் கப்பலாகக் கிழிந்தது வாழ்க்கையும்
கடுகு பொறிக்காத வீடுகள் கூட உண்டு
கண்டராவி மாமிய மருமகள் சண்டையிடும்
காட்சியில்லா வீடுகள் இல்லை
குணம் கோபுரத்தில் நின்றாட
குடும்பம் சந்தோச நிழலாட
கும்மியடிக்க ஆரம்பித்தது உறவுக் கூட்டம்.
மகராசியை சேர்த்து வச்ச காக்கா கூட்டம்
மத்துக்கட்ட போட்டு வாயல் ஆட்டியது
மானங்கெட்ட பொறாமைக் கூட்டம்..
பத்தவச்ச தீச்சொல் கேட்டு
விளக்கெற்ற வந்த பச்சோந்தி
விளக்கை அணைத்து வீட்டைக்கொழுத்த..
ஈஸ்வரன் விளையாட்டு தொடரும்..
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்