காதல் தோல்வி கவிதை

நண்பர்கள் பலர் *காதல் தோல்வி கவிதை* எழுத சொன்னார்கள்..... அதனால் இந்தக் கவிதையை எழுதினேன் *அதை உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்திருக்கிறேன்....*
💔💔💔💔💔💔💔💔💔💔💔

*சுகமான காயங்கள்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

💔💔💔💔💔💔💔💔💔💔💔

தீபத்தைச் சுமக்கும்
சுடரைப் போல்
உன் நினைவுகளை
நான் சுமக்கிறேன்....

என்னை விட்டுப்
பிரிந்து சென்றாய்
எப்படி இருக்கிறேன்
நான் அங்கு ..?

காதலுக்குப்
பிரிவென்பதெல்லாம்
சம்பிரதாயம் தான்....

காதல்
யானையைப் போன்றது
"இருந்தாலும்" ஆயிரம் பொன்
"இறந்தாலும்" ஆயிரம் பொன்....

நான்
சுத்தம் செய்யப்படுகிறேன்
அழுகையால்....

புத்தனுக்கும் எனக்கும்
சின்ன வித்தியாசம்தான்
புத்தன்
ஆசையைத் துறந்தான்
ஆசை
என்னைத் துறந்தது.....!!!

உன் ஞாபகங்கள்
எனக்கு நிறையக்
கவிதைகளைப்
பறித்துப் போடுகிறது...!

நீ !
அமுதமா? நஞ்சா ?
எனக்கு அவசியமற்றது
உன்னை உன்பதில்
நான் சுகம் பெறுகிறேன்....

நீ இருந்தபோது
மலரைத் தான் ரசித்தேன்
இப்போது
முள்ளையும் ரசிக்கிறேன்
பிரிவுக்கு நன்றி....

உன்னை
நினைக்கவும் இல்லை
மறக்கவும் இல்லை ....

யாருக்கும் தெரியாமல்
உன்னைக்
கண்ணுக்குள்
வைத்திருக்கிறேன்
கனவாக்கி...

"காயங்கள்" கூட
சுகமானதாகத்தான்
இருந்தது
உன்னால்
ஏற்பட்டப்போது...

"வலிகளையும்"
விரும்புகிறேன்
இல்லையென்றால்
நான் "கவிஞனாகி"
இருக்க முடியாது....!!!


*கவிதை ரசிகன்*

💔💔💔💔💔💔💔💔💔💔💔

எழுதியவர் : கவிதை ரசிகன் (12-Feb-24, 8:20 pm)
பார்வை : 218

மேலே