சாயம்
இந்நேரம் நீ
சூரியனால்
உருகிக் கொண்டிருப்பாய்
மிதமிஞ்சிய வெய்யிலின்
கோபம்
உன் உடல்
வியர்வையால் குளித்திருக்கும்
எப்படியேனும்
மரங்கள்
தலையசைக்க மறுத்த
தெருவில் தான்
நாம் சந்திப்பதாக உத்தேசம்
வெளிச்சத்தின் குறைபாடாய்
அன்று
மழையும் வந்தது
நல்ல வேளையாக
நீ குடையுடன் வந்திருந்தாய்
நானோ அளப்பரிய ஈரத்தோடும்
உன்னை பருகும் விழியோடும்
உன்னருகில் வந்தமர்ந்தேன்
மழையை சனியனென்றாய்
வழக்கமாக
என்ன ஆச்சு என்றேன்
என்னோட புது கவுன் எப்படி ஈரமாயிடுச்சு பாத்தியா
அன்பே
உன் கவலைகள்
ஏன் இவ்வளவு மலிவாக இருக்கின்றன
புலப்படாமல் விழித்தேன்
நீ ஆசையா எடுத்து கொடுத்தியே
அந்த கவுன் தான் இது
எனக்கும் கோபமாக வந்தது
மழையை கண்டபடி திட்டினேன்
நீயோ புரியாமல்
விழித்தாய்
சந்தையில் வாங்கியதாயிற்றே
சாயம் போவதை நீ அறிந்தால்
யார் உன்னை சமாளிப்பது?