குலோத்துங்க சோழன் கோவை - நூல் - ஐந்தாவது – பிரிவுழி மகிழ்ச்சி
அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.
மூன்றாவது - வன்புறை.
அஃதாவது-தலைவி ஐயுற்றவழி ஐயந்தீரத் தலைவன் வற்புறுத்திக் கூறல்;
அஃது-ஐயந்தீர்த்தல், பிரிவறிவுறுத்தலென இருவகைப்படும்;
அவை: அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் முதல் இடமணித்தென்றல் ஈறாகிய ஆறுவிரிகளையுடையன;
அவை வருமாறு:
அணிந்துழி நாணீயது உணர்ந்து தெளிவித்தல்.
பெருநயப் புரைத்தல்.
தெய்வத்திறம் பேசல்.
பிரியே னென்றல்
பிரிந்து வருகென்றல்.
இடமணித் தென்றல்.
இவற்றுள் முன்னைய மூன்றும் ஐயந் தீத்தற்கும், பின்னைய மூன்றும் பிரிவறிவுறுத்தற்கும் உரியன.
3 - வன்புறை முற்றிற்று.
நான்காவது – தெளிவு.
ஐந்தாவது – பிரிவுழி மகிழ்ச்சி.
அஃதாவது – பிரிந்து போகுமிடத்துப் போகின்ற தலைவி தன்மையைக் கண்டு தலைவன் மகிழ்தல்;
இது – வகையினறிச் செல்லுங் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லலும், பாகனொடு சொல்லலும் ஆகிய இரண்டு விரிகளை யுடையது; அவை வருமாறு:-
செல்லுங் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லல்.
(இ-ள்) புனர்ச்சிக் குறியிடத்தினின்றும் பெயர்ந்து செல்லா நின்ற தலைமகளது செலவைக் கண்டு தலைவன் றன்னெஞ்சொடு சொல்லுதல்.
கட்டளைக் கலித்துறை
பின்னே சரிகொண்டை யோர்காந்த ளேந்தவும் பெய்கலையைத்
தன்னே ரிலாதொரு தாமரை தாங்கவுந் தண்டமிழ்க்குப்
பொன்னே பொழியுங் குலோத்துங்க சோழன் புகார்வரைவா
யென்ன நடக்கின்ற வாநெஞ்ச மேயென தின்னுயிரே!.30