இருட்டுதனிமை…திகில்

இருட்டு..தனிமை…திகில்

நிசப்தமான அந்த
இரவு கருமையில்
தனிமையில் நடந்து
கொண்டிருக்கிறேன்
பகலில் தினமும்
நடக்கும் பாதைதான்
இரு புற
காட்டு புதர்களும்
தோளை உரசும்
தொங்கும் கொடிகளும்
இப்பொழுது
ஏனோ இவைகள்
திகிலை
காட்டும் பல பல
உருவங்களாய்..!
மனதுக்குள் வந்தாட

காலை உரசி
சென்ற பூனையின்
பிளிறல் மனதுள்
இறங்கும் சில்லிடும்
உணர்வாய்…

வெளிச்ச புள்ளிகள்
கண்ணுக்கு தெரிய
வரிசையில் அமைந்த
வீடுகள் தெரிய

மனதுக்குள் ஆர்ப்பரித்த
பீதியின் பிரமை
மெல்ல அடங்கி போக


வாசல் கதவை தட்டி
திறந்த வீட்டுக்குள்
நுழையுமுன்

வந்த
பாதையை திரும்பி
பார்க்க எப்பொழுதும்
இருக்கும் அதே
சூழ்நிலைகள்தான்

அப்புறம் ஏன்
இத்தனை திகில் பயம்
மனதுக்குள்

ஓ… இருட்டு
உள்ளத்தில் புகுந்து விட்டால்
எல்லாமே பயமாகத்தான்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (24-Feb-24, 2:53 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 68

மேலே