என்மனம் பிருந்தாவனம்

என்மனம் பிருந்தாவனம்
என்நினைவெல்லாம்
கண்ணனின் நர்த்தனம்

என்மனம் வேய்ங்குழல்
அதில் கண்ணன்
இசைப்பான் வேணுகானம்

என்மனம் யமுனா நதிதீரம்
அங்கே கோபியருடன்
கண்ணனின் ராஸலீலா
நாடகம்

என்மனம் ஒரு போர்க்களம்
கண்ணன் அங்கே
உரைப்பதோ கீதோபதேசம்

எழுதியவர் : கவின்சாரலன் (14-Sep-24, 5:00 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

மேலே