கடந்த கால நினைவுகள்

(வசந்த கால நினைவுகள் பாட்டு மெட்டு)
கடந்த கால நினைவுகள்
மனதில் பதிந்த கனவுகள்
மறந்து போன நிகழ்வுகள்
கண்கள் ஒளிரும் நினைவினில்

கடந்த கால நினைவுகள்
மனதில் பதிந்த கனவுகள்
மறந்து போன நிகழ்வுகள்
கண்கள் ஒளிரும் நினைவினில்

மனதி லாடும் நிழற்படம்
அதிலும் தோன்றும் ஓவியம்
சேர்ந்து பயின்ற நண்பர்கள்
அவர்க்கு வாய்த்த வாழ்வுகள்
கள்ளம் இல்லா அன்புமனம்
இன்றும் மகிழும் பேச்சினில்

மறந்து போன நிகழ்வுகள்
கண்கள் ஒளிரும் நினைவினில்

நேரில் பார்த்த நொடியிலே
பழைய உருவம் தெரிந்தது
வளர்ந்த பாதை அறிந்ததில்
நண்பன் உள்ளம் மகிழ்ந்தது
வாழ்க்கை என்னும் கடலிலே
மூழ்கிப் போன உயிர்களின்
நினைவில் மனது வலித்தது
ஆடிப் பாடி மகிழ்ந்ததில்
அனைவர் உள்ளம் குளிர்ந்தது
வயதும் கொஞ்சம் குறைந்தது
இன்னும் இருக்கும் வாழ்விலே
மீண்டும் குழும விழைந்தது.

எழுதியவர் : உதய நிலவன் (Dr.B. சந்திரமௌலி) (29-Feb-24, 5:50 am)
சேர்த்தது : Dr B Chandramouli
பார்வை : 62

மேலே