அடக்கியிரு ஆசை அடக்கியிரு - கலித்துறை
கலித்துறை
(காய் மா காய் மா காய்)
முடியவில்லை உடம்பு முடியவில்லை ஏனோ
..முடியவில்லை;
அடக்கியிரு ஆசை அடக்கியிரு அதையும்
..அடக்கியிரு!
இடனறிந்தே யிருப்பா யிடனறிந்தே யிருந்தா
..லிடரிலையே;
படபடெனப் பேசல் பாந்தமிலை பணிந்தே
..பேசுவயே!
- வ.க.கன்னியப்பன்